Thursday, July 30, 2015

பாலியல் தொழில் மனித உரிமையா? வெடிக்கும் சர்ச்சை

பாலியல் தொழிலை மனித உரிமையாக அங்கீகரிக்க சர்வதேச மன்னிப்புச் சபை முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
மனித உரிமை அமைப்பான சர்வதேச மன்னிப்புச் சபையின் இந்த முயற்சி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் அடுத்த வாரம் சர்வதேச மன்னிப்புச் சபையின் பேரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானங்களில் பாலியல் தொழிலை மனித உரிமையாக அங்கீகரிக்க வேண்டும் என்ற தீர்மானம் முக்கியமான தீர்மானமாக நிறைவேற்றப்பட உள்ளதுடன் அதற்கு அங்கத்தவர்களின் ஆதரவும் கோரப்பட்டுள்ளது.
உலகமெங்கும் உள்ள சர்வதேச மன்னிப்புச் சபையின் அங்கத்தவர்கள் டப்லின் நகருக்கு வருகை தரவுள்ள நிலையில், அதன் இந்த தீர்மான வரை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிற தொழில்களை போல் பெண்கள் பாலியல் தொழிலை ஒரு தொழிலாக மேற்கொள்ளலாம் என சர்வதேச மன்னிப்புச் சபை வாதத்தை முன்வைத்துள்ளது.
பெண் சுதந்திரம் என்ற பெயரில் சர்வதேச மன்னிப்புச் சபை இந்த யோசனையை முன்வைத்துள்ளது.
எனினும் ஐரோப்பிய ஊடகங்கள் சர்வதேச மன்னிப்புச் சபையின் தீர்மான வரைவு குறித்து குறைகளை முன்வைத்துள்ளன.
ஒரு பெண் வேறு வழியின்றி பாலியல் தொழிலுக்கு வந்தாலும் அதனை மனித உரிமையாக அங்கீகரிக்க முடியாது என இந்த ஊடகங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளன.
வறுமை காரணமாக பெண் ஒருவர் வேறு தொழில் வழியின்றி பாலியல் தொழிலை மேற்கொண்டால், அது மனித உரிமையாக நோக்கப்படுமா என்பது குறித்து விளக்கம் தேவைப்படுவதாகவும் பெரும்பாலும் பாலியல் தொழில் வயிற்று பிழைப்புக்காவே நடப்பதாக அந்த ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:

Post a Comment