Monday, July 20, 2015

மகிந்தவின் டிப்ளோ மெட்டிக் பாஸ்போட்டை கான்சல் செய்துவிட்டார் ரணில் !

பல உலக நாடுகளில் ராஜதந்திரிகளுக்கு என்று , நீலக் கலர் பாஸ்போட்டை அன் நாடுகள் வழங்குவது உண்டு. அதனை டிப்ளோமெட்டிக் பாஸ்போட் என்று கூறுவார்கள். அதுபோன்ற நீல நிற டிப்ளோமெட்டிக் பாஸ்போட்டையே மகிந்த ராஜபக்ஷ இது நாள் வரை பாவித்து வந்தார். இதனால் என்ன நன்மை என்றால் , எந்த வெளிநாட்டுக்குச் செல்லவேண்டும் என்றாலும் இலகுவாக விசா எடுத்துவிட முடியும். மேலும் அவர் பயணிக்கும் வெளிநாட்டில் அவருக்கு உரிய மரியாதை மற்றும் பாதுகாப்பும் கொடுக்கப்படும். தற்போது மகிந்த ராஜபக்ஷ பாவித்து வந்த குறித்த பாஸ்போட்டை தாம் ரத்துச் செய்து விட்டதாக ரணில் விக்கிரமசிங்க நேற்று அறிவித்துள்ளார்.
எப்பாவல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தமது தேர்தல் விஞ்ஞாபனததை அறிவிக்கவுள்ளது. இதில் பொது மக்களுக்கு பாரிய நலன்கள் அறிவிக்கப்படும்.
அதேநேரம் மகிந்தராபக்ஷவினால் தொடர்ந்து முன்செல்ல முடியாது. அவரது அரசியல் பயணச்சீட்டு ரத்து செய்யப்பட்டுவிட்டது என்றுஅவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment