வட அமெரிக்கா பூராகவும் நகர்ப்புற மற்றும் கிராமபுற பகுதிகளிலும் சப்பாத்து மரங்கள் பரவலாக காணப்படுகின்றன.தற்சமயம் இப்போக்கு ஐரோப்பிய நாடுகளிலம் பரவி வருகின்றதென கூறப்படுகின்றது.
குறைந்தது நூறு ஆண்டுகளிற்கு மேலாக சப்பாத்து மரங்கள் என அழைக்கப்படும் இவை பழக்கத்தில் இருந்து வருகின்றன. இவை நிலைத்து நிற்பதற்கு பல கோட்பாடுகள் உள்ளன.
சோடி சப்பாத்துக்களை மரத்தில் எறிவதை சிலர் நம்புகின்றனர். சில சந்தர்ப்பங்களில் மேல்நிலையில் உள்ள மின் கம்பிகள் மீதும் எறிகின்றனர். சேவையில் இருந்து விலகும் போது போர்வீரர்கள் தங்கள் சப்பாத்துக்களை மின்கம்பிகள் மேல் வீசி சென்றனர் என்றும் இதிலிருந்து இந்த முறை ஆரம்பித்ததெனவும் கூறப்படுகின்றது. தங்கள் சேவைக்காலம் முடிவடைகின்றதன் அடையாளமாக அவர்களது முகாம்களிற்கு அண்மையில் உள்ள மின்கம்பிகளில் எறிந்து விட்டு சென்றனர்.
கொடுமைப்படுத்துதலின் ஒரு வடிவம் என வேறு சிலர் கூறுகின்றனர். கொடுமை படுத்துபவர்கள் பாதிக்கப்பட்டவரின் ஒரு சோடி காலணியை திருடி இத்தகைய ஒரு இடத்தில் போடுவது பாதிக்கப்பட்டவர்கள் ஒரு போதும் மீள முடியாதென்பது போன்றதாகும்.
போதை மருந்து வாங்குமிடத்தின் குறிகாட்டியாகவும் சதிக்கும்பலின் அடையாள சின்னமாகவும் கூட பயன்படுத்தப்படுகின்றது.
ஐரோப்பியாவில் இறந்தவர்களின் குறிகாட்டியாகவும் அல்லது ஒரு வகையான சடங்காக கருதுகின்றனர்.
ஆனால் சிலர் போதையில் இதனை ஒரு விளையாட்டாக கருதுகின்றனர்.
எது எப்படியாயினும் ரொறொன்ரோவில் இருந்து 90கிலோ மீற்றர் வடக்கில் உள்ள ஒரு குக்கிராமத்தில் அமைந்துள்ள லேக் றிட்ஜ் விதியில் வசித்த புறூஸ் சரசின் என்பவருக்கு ஒரு சப்பாத்து மரம் சிறப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
1990-ல் அவரது மூத்த சகோதரர் மரத்தில் சப்பாத்தை எறிவதை ஆரம்பித்தார். தனக்கு தேவைப்படாதென கருதிய ஒரு சோடி சப்பாத்தை  வேறு யாராவது உபயோகிக்கட்டும் என நினைத்து மரத்தில் எறிந்தார்.
அப்பழக்கம் தனது தாய் மூலம் தொடர்ந்ததென சராசின் தெரிவித்தார். அவருக்கு 14 பிள்ளைகள் இருந்தனர். அக்கால கட்டம் மிகவும் கடினமானதாக இருந்தது. தேவையானவர்களிற்கு உதவும் எடுத்து கொள்ளட்டும் என சப்பாத்துக்களை மரத்தில் எறிந்ததாக கூறினார்.
54-வயதுடைய சராசின் கடந்த வருடங்களில் தான் அந்த மரத்தை உபயோகித்து வருவதாக தெரிவித்தார்.
இன்று அந்த மரம் சப்பாத்துக்களால் மூடப்பட்டுள்ளது. போக்கும் தொடர்கின்றது.
shoe1
OLYMPUS DIGITAL CAMERA
shoe2shoe3shoe4