Sunday, July 19, 2015

கண்ணீர் விட்டு கதறி அழுத அகதி: மனம் உருகி குடியேற்ற அனுமதி வழங்கிய ஜேர்மனி அதிபர் (வீடியோ இணைப்பு)

ஜேர்மனி நாட்டில் தற்காலிகமாக குடியேறியுள்ள லெபனான் நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் தன்னுடைய நிலை குறித்து அதிபர் முன்னிலையில் கதறி அழுத நிகழ்வு பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Rostock என்ற நகரில் கடந்த வெள்ளிக்கிழமை ‘Good Life in Germany’ என்ற தலைப்பில் அந்நாட்டு அதிபரான ஏஞ்சிலா மெர்கெல் புலம்பெயர்ந்தவர்களிடம் குறைகளை கேட்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றுள்ளது.
அப்போது, கூட்டத்தில் ரீம் என்ற சிறுமி ஏஞ்சலா மெர்கெலிடம் நேருக்கு நேராக பேசியுள்ளார்.
சிறுமி பேசுகையில், மேற்கு ஆசிய நாடுகளில் ஒன்றான லெபனான் நாட்டிலிருந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் தஞ்சம் கோரி தற்காலிகமாக குடியேறினேன்.
ஆனால், பல முயற்சிகளுக்கு பின்னரும் கூட, தன்னையும் தனது குடும்பத்தினரையும் நாடு திரும்ப வைக்கும் முயற்சியே நடைப்பெற்று வருகிறது.
ஜேர்மனியில் உள்ள மற்ற குழந்தைகளை போல், நானும் படிக்க வேண்டும். அவர்களை போல் வாழ்க்கையில் முன்னேற சாதிக்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கும் இருக்கிறது என கூறியுள்ளார்.
சிறுமிக்கு பதிலளித்த ஏஞ்சிலா மெர்கெல், சில நேரங்களில் அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் சிலரால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிக எண்ணிக்கையிலான அகதிகளையும் தங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத சூழலில் இருக்கிறோம் என கூறியுள்ளார்.
இந்த விளக்கத்தை கேட்ட அந்த சிறுமி கதறி அழுதுள்ளார். சிறுமி அழுவதை பார்த்த அதிபர், அவர் அருகில் சென்று அவரை சமாதானப்படுத்தினார்.
இந்த நிகழ்ச்சி குறித்து பேசிய ஜேர்மனி அமைச்சரான Aydan Ozoguz, சிறுமியின் உண்மையான நிலை குறித்து எதுவும் தெரியாது. ஆனால், அவர் தடையின்றி ஜேர்மன் மொழியை பேசுகிறார், மேலும் கடந்த 4 ஆண்டுகளாக ஜேர்மனியில் வசித்து வந்துள்ளதும் நிரூபனம் ஆகியுள்ளது என்றார்.
இந்நிலையில், Rostock நகர் மேயர் அலுவலகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், தற்போது அந்த சிறுமியையும் அவரது குடும்பத்தினரையும் நாட்டை விட்டு வெளியேற்றும் எண்ணம் இல்லை என கூறியுள்ளார்.
அதிகாரிகள் பத்திரிகைகளில் வெளியிட்டு செய்திகளை தொடர்ந்து, சிறுமிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் குடியேற்ற அனுமதி இன்னும் சில வாரங்களில் அளிக்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments:

Post a Comment