Thursday, July 30, 2015

இந்திய டுபாகூர் மருத்துவர் லண்டனில் மாட்டிக்கொண்டார்: 25,000 பவுண்டுகள் அபராதம்

இதுவரை காலமும் இந்தியாவில் பல டுபாக்கூர் காட்டி வந்த பங்கஜ் நாராம் என்னும் மருத்துவர் , லண்டனில் வசமாக மாட்டிக்கொண்டார். தான் இதுவரை கான்சரால் பாதிகப்பட்ட 75,000 பேரைக் காப்பாற்றியுள்ளதாகவும். திபெத்திய ஆண்மீக தலைவர் தலே லாமாவின் அம்மாவைக் கூட கான்சரில் இருந்து தான் தான் காப்பாற்றியதாக இவர் கூறிவந்துள்ளார். மருத்துவர்களால் கைவிடப்பட்ட சுமார் 15,000 பேரை( அதாவது இன்னும் 2 மாசம் தான் உயிரோடு இருப்பார்கள் என்று கூறப்பட்ட) பலரை தாம் காப்பாற்றியுள்ளதாக இவர் கூறியுள்ளார். அது என்னவென்றால் 10 பாசில் இலைகளையும் 3 கறுப்பு பெப்பரையும்(மிளகு) சாப்பிட்டால் கான்சர் சுகமாகும் என்று இவர் இதுவரை காலமும் இந்தியாவில் பீல விட்டு வந்துள்ளார்.
போறாத காலமோ என்னவோ , லண்டனில் உள்ள TV ஏசியா என்னும் சேனல் இவரை பேட்டி கண்டுள்ளது. அதில் கூட இவர் கான்சருக்கு எஸ்ரே தரப்பி எல்லாம் தேவையில்லை. 10 பாசில் இலை மற்றும் 3 மிளகை சாப்பிட்டால் போதும் என்று கூறியுள்ளார். இவரது கதையை இந்தியாவில் உள்ள பாமர மக்கள் நம்புவார்கள். லண்டனில் உள்ளவர்கள் நம்புவார்களா ? அவர்கள் உடனடியாக ஓஃப் கம்(OFCOM) முறைப்பாடு செய்துள்ளார்கள். குறித்த நிகழ்ச்சியை பார்த்த ஓஃப் கம் நிறுவனம் பிழையான தகவலை மக்களுக்கு வழங்கியமைக்காக 25,000 பவுன்டுகளை அபராதமாக விதித்துள்ளது. அத்தோடு இன் நிகழ்ச்சிக்கு மறுப்பு தெரிவித்து செய்தி வெளியிடவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது

No comments:

Post a Comment