Friday, July 31, 2015

லண்டனில் 17 வயது சிறுவன் நீரில் மூழ்கி இறக்கும் வரை வேடிக்கை பார்த்த பொலிசார் !


லண்டனில் உள்ள ஹக்னி என்னும் இடத்தில் , பொலிசார் ஒரு 17 வயதுச் சிறுவனைப் பிடிக்க முயன்றுள்ளார்கள். குறித்த சிறுவன் தன்னை காப்பாற்றிக்கொள்ள அருகில் உள்ள ஏரி ஒன்றினுள் குதித்துள்ளான். கடும் குளிரில் இருந்த அந்த ஏரியில் அவன் சுமார் 30 நிமிடங்களாக தத்தளித்துள்ளான். சுற்றிவர சுமார் 15 பொலிசார் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்துள்ளார்கள். அங்குள்ள பொதுமக்கள் , இச்சிறுவன் இறந்துவிடுவான் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார்கள். ஆனால் தமக்கு அதற்கான அதிகாரம் இல்லை என்றும். தீ அணைக்கும் படை அல்லது மீட்ப்பு படையணி வந்து தான் அவனை மீட்க்கவேண்டும் என்று பொலிசார் கூறிவிட்டார்கள்.
மக்கள் மத்தியில் எழுந்த கடும் அதிருப்த்தி காரணமாக இறுதியாக ஒரு பொஸ்காரர் தண்ணீரில் குதித்துள்ளார். அதுவும் அந்தச் சிறுவன் முற்று முழுதாக தண்ணீரில் மூழ்கிய பின்னரே. ஆனால் சிறுவனைக் காப்பாற்ற முடியவில்லை. ஜாக் சுசியந்த என்ற இச் சிறுவன் பரிதாபமாக இறந்துவிட்டான். இதனால் பெரும் சிக்கலில் பொலிசார் மாட்டிக்கொண்டுள்ளார்கள். பல பொது மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கும் வேளை தான் இச்சம்பவம் இடம்பெற்றதால் , பொலிசாருக்கு எதிராக பலர் சாட்சி சொல்லியுள்ளார்கள். இச்சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து பொலிசாரையும் விசாரிக்க வேண்டும் என்று , மக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

No comments:

Post a Comment