Tuesday, July 28, 2015

15 பேரின் உயிரை பறித்த மனித வெடிகுண்டு ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர்: அம்பலமான ரகசிய தகவல்

சோமாலியா நாட்டில் கடந்த ஞாயிறு அன்று நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் ஈடுபட்ட நபர் ஜேர்மன் நாட்டு குடிமகன் என தற்போது ரகசிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோமாலியா நாட்டின் மிகபெரிய நகரங்களில் ஒன்றான Mogadishu என்ற நகரில் உள்ள Jazeera Palace என்ற 5 நட்சத்திர ஹொட்டலில் கடந்த ஞாயிறு அன்று மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதலில் சீனா நாட்டு தூதரக அலுவலர் உள்பட 15 பேர் உடல்கள் சிதைந்து பலியாயினர்.
ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த அலுவலகங்கள் அதிகமாக இருந்த சாலையில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்துள்ளதால், தாக்குதலுக்கு காரணமானவர்களை பொலிசார் தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
தாக்குதல் நிகழ்ந்து இரண்டு நாட்களுக்கு பின்னர், தற்போது இந்த மனித வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியது ஜேர்மனி நாட்டை சேர்ந்தவர் தான் என விசாரணை அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் உள்ள Bonn நகரை சேர்ந்த அந்த நபர் சோமாலியாவிற்கு வருவதற்கு முன்னர் ஜேர்மனி குடியுரிமையையும், சோமாலியாவிற்கு வந்த பிறகு சோமாலிய குடியுரிமை என இரண்டு நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும், சோமாலியாவில் செயல்பட்டு வரும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் ஒரு பிரிவான al Shabaab அன்ற அமைப்பில் இணைந்து அந்த ஜேர்மனி நபர் மனித வெடிகுண்டாக மாறி இந்த தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பெயர் வெளியிட விரும்பாத விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அன்று தனது உடல் முழுவதும் வெடிகுண்டுகளை சுற்றிக்கொண்டு, வெடிப்பொருட்கள் நிரப்பிய வாகனத்துடன் வந்த அந்த நபர் ஹொட்டலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment