இங்கிலாந்தில் உள்ள 100 வயது பாட்டி தனது இளமையின் ரகசியம் காலை உணவாக பீர் அருந்திவருவதே காரணம் என்கிறார்
இங்கிலாந்தை சேர்ந்த மூதாட்டி கிளாடிஸ் பீல்டன். இவருக்கு 100 வயது ஆகிறது. சமீபத்தில் தான் தனது பிறந்த நாளை கொண்டாடினார். இவருக்கு ராணி எலிசபெத் வாழ்த்து கார்டு அனுப்பி இருந்தார்.100 வயதிலும் இன்னும் அவர் உடல் திடகாத்திரமாக இருக்கிறார். உறுதியான பற்கள் மற்றும் நல்ல கண்பார்வையுடன் காணப்படுகிறார். மிகவும் சுறுசுறுப்பாக இயங்கும் அவரிடம் இது குறித்த ரகசியம் பற்றி கேட்கப்பட்டது.
அதற்கு அவர் ‘பீர்’தான் தன்னை நலமுடன் இவ்வளவு காலம் வாழ வைப்பதாக ‘ப்ளிச்’என்பதில் கூறினார். இவர் தனது 30 வயது வயதில் இருந்து அதாவது கடந்த 70 வருடங்களாக ‘கின்னஸ்’என்ற பீர் குடிக்கிறார்.தினமும் காலை 10.30 மணி அளவில் 20 அவுன்ஸ் ‘பீர்’எடுத்துக் கொள்கிறார். இவர் தனது 90 வயது வரை ரொட்டி தயாரித்து விற்பனை செய்து வந்தார்.இன்னும் நல்ல உடல் திறனுடன் இருக்கும் அவர் ‘கேக்’மட்டும் சாப்பிடு வதில்லை. அவற்றை சாப் பிட்டால் நோய் தாக்கி விடும் என கருதுகிறார்.