Thursday, June 25, 2015

வெடித்துச் சிதறியது iPhone 6: ஆபத்து எதுவுமின்றி தப்பினார் உரிமையாளர்


கடந்த காலங்களில் ஸ்மார்ட் கைப்பேசிகளின் வெடிப்பு சம்பவம் அதிகமாக காணப்பட்டிருந்த போதிலும் அண்மைக் காலங்களில் குறைவடைந்திருந்தன.
இதேவேளை அண்மைய வெடிப்புச் சம்பவமாக இந்தியாவின் குர்கான் பகுதியிலுள்ள கிஷான் யாதவ் என்பவருடைய iPhone 6 வெடித்துள்ளமை பதிவாகியுள்ளது.
எனினும் இதன்போது அவருக்கு எவ்விதமான காயங்களும் ஏற்பட்டிருக்கவில்லை.
இவர் குறித்த கைப்பேசியை கொள்வனவு செய்த சில தினங்களில் இவ் வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment