Friday, June 26, 2015

பூமியை தாக்கப்போகும் சூரிய மின் காந்த புயல்; வெளியான அதிர்ச்சி தகவல்கள்


சூரியனில் இருந்து அதிசக்தி வாய்ந்த வெப்பம் வெளிப்படும்போது அது புயலாக மாறி விண்வெளியில் பரவி வருகிறது. அது பூமியை தாக்கி ஆபத்தை ஏற்படுத்தும் என அடிக்கடி எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இதுவரை அது போன்று நடந்ததில்லை. ஏனெனில் சூரியனில் இருந்து வெளிப்படும் நெருப்பு போன்ற சிறு துண்டுகள் சிதறி பூமியை அடைவதற்குள் கரைந்து காணாமல் போய் விடுகின்றன.
இந்த நிலையில் தற்போது மீண்டும் சூரிய புயல் உருவாகியுள்ளது. அது வருகிற 28ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) வழக்கத்தை விட அதிவேகமாக பயணம் செய்து விரைவில் பூமியை தாக்கும் என அஞ்சப்படுகிறது. இத்தகவல அமெரிக்க தேசிய கடல் மற்றும் விண்வெளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஒருவேளை இந்த சூரிய புயல் பூமியை தாக்கினால் பூமி முழுவதும் மின் விநியோகம் பாதிக்கப்படும். அதன் மூலம் மின்தடை ஏற்படும். கம்ப்யூட்டர் நெட்வொர்க் மற்றும் டெலிபோன் சேவைகள் உள்பட அனைத்து தொலை தொடர்பு சாதனங்களும் செயல் இழக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் சூரிய புயல் மணிக்கு 16 லட்சத்து 9 ஆயிரத்து 347 கி.மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கி பாயலாம். இருந்தாலும் புயல் ஏற்படுவதை 30 நிமிடங்களுக்கு முன்புதான் துல்லியமாக கணிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இதற்கிடையே சூரிய புயல் குறித்து பீதி அடைய தேவையில்லை என இங்கிலாந்து தெரிவித்துள்ளது. தற்போதுள்ள அதிநவீன தொழில்நுட்பத்தின் மூலம் சூரிய புயல் தாக்குதலின் தீவிரத்தை குறைக்க அனைத்து நடவடிக்கைளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment