அல்காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் கொல்லப்படுவதற்கு முன்பு, 6 ஆண்டுகள் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயால் சிறைவைக்கப்பட்டிருந்தார். பின்னர் அவரை ஐஎஸ்ஐ அமெரிக்காவிடம் ஒப்படைத்தது என தகவல் வெளியாகியுள்ளது.
ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானின் அபோதா பாத் நகரில் அமெரிக்காவின் கடற்படையைச் சேர்ந்த சீல் பிரிவினர் கடந்த 2011 ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றனர்.
ஆனால், பின்லேடன் அமெரிக்க படையினரின் அதிரடி நடவடிக்கையால் சுட்டுக் கொல்லப்பட்டது திட்டமிட்ட நாடகம் என, புலிட்சர் விருது வென்றவரும் அமெரிக்காவை சேர்ந்த புலனாய்வு செய்தியாளருமான செய்மோர் ஹெர்ஷ் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஐஎஸ்ஐ தான் அமெரிக்காவிடம் பின்லேடனை ஒப்படைத்தது எனவும் தகவல் வெளியாகி உள்ளது.
பின்லேடன் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆய்வு செய்துவரும் ஜான் கார்பின், பிபிசி தொலைக்காட்சியில் இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஜான் கார்பினின் தகவலின் படி, பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அரசின் உயர் மட்டத்திலிருப்பவர்கள் சதித்திட்டம் தீட்டி, பின்லேடனைக் கொலை செய்தனர். அபோதாபாத்தின் காரிஸன் பகுதியில் ஐஎஸ்ஐ யால் பின்லேடன் சுமார் 6 ஆண்டு கள் சிறை வைக்கப்பட்டிருந்தார்.
அமெரிக்க படையினர் ‘திட்ட மிட்டபடி’ அதிரடி சோதனையில் இறங்கியபோது அவர்களிடம் ஐஎஸ்ஐ, பின்லேடனை ஒப்படைத்தது. பாகிஸ்தான் இராணுவத்துக்குத் தெரியாமல் இது நடந்திருக்காது. இராணுவத்தின் உயர் பாதுகாப்பு பகுதியில்தான் பின்லேடன் தங்க வைக்கப்பட்டிருந்தார், என பிபிசிக்கு ஜான் கார்பின் அளித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.obama