Monday, June 29, 2015

அந்தரங்க பாலியல் உரையாடலை தவறுதலாக நகர மக்களுக்கு ஒலிபரப்பிய கனேடிய பொலிஸார் !

கனே­டிய பொலிஸ் உத்­தி­யோ­கஸ்­தர்கள் இருவர், தமது அந்­த­ரங்க பாலியல் உரை­யா­டல்­களைத் தவ­று­த­லாக நகரம் முழு­வ­தற்கும் ஒலி­ப­ரப்­பிய சம்­பவம் அண்­மையில் இடம்­பெற்­றுள்­ளது. கன­டாவின் வின்­னிபெக் நகர பொலிஸ் ரோந்து ஹெலி­கொப்டர் ஒன்றில் பயணம் செய்­து­கொண்­டி­ருந்த பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர்கள் பாலியல் தொடர்­பாக அந்­த­ரங்­க­மாக உரை­யா­டிக்­ கொண்­டி­ருக்­கும்­போது, தமது உரை­யா­டலை ஒலி­பெ­ருக்கி மூலம் நகர மக்­க­ளுக்கு ஒலி­ப­ரப்­பு­வ­தற்­கான பொத்­தானை தவ­று­த­லாக அழுத்­தி­விட்­டனர்.
இதனால், இவர்­களின் பாலியல் உரை­யாடல் வின்­னிபெக் நகர மக்­களால் செவி­ம­டுக்­கப்­பட்­டது. இந்த உரை­யா­டலைக் கேட்ட பலர் அதிர்ச்­சி­ய­டைந்­தனர். இது தொடர்­பாக சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் பலர் விமர்­சித்­தனர். தமது அந்­த­ரங்க உரை நகர மக்­க­ளுக்கு பகி­ரங்­க ­மா­கிவிட்­டதை அறிந்து நெருக்கடிக்குள்ளான மேற்படி பொலிஸ் உத்தியோகத்தர்கள் இதற்காக மக்களிடம் மன்னிப் புக்கோரியுள்ளனர்.

No comments:

Post a Comment