Friday, June 26, 2015

பெரதேனியா பல்கலைக்கழக மாணவி செல்வி. பானுசாவின் தற்கொலைக்கான காரணம்!!

பெரதேனியா பல்கலைக்கழக மாணவி செல்வி. பானுசாவின் தற்கொலைக்கான காரணம்!!

பெரதேனியா பல்கலைக்கழக மாணவி செல்வி. பானுசாவின் தற்கொலைக்கான காரணம்!!

பெரதேனியா பல்கலைக்கழகத்தில் இறுதியாண்டில் கல்வி பயின்ற மாணவி பானுசா சிவப்பிரகாசா நேற்று காலை  (ஜுன் 24, 2015) பளை, கரந்தாயில் தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
இதற்கான காரணங்களாக எமது செய்தி நிறுவனத்திற்கு நம்பகமாக கிடைத்த குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் நண்பர்கள் கொடுத்த தகவல்கள் வருமாறு.
11664906_802683259847378_1381463133_o
தற்கொலை செய்த மாணவி பானுசாவின் மீது சாவச்சேரி, ங்கத்தானையை சேர்ந்த  அர்ஜூனன் கோவிந்தப்பிள்ளை எனும் இளைஞன் ஒரு தலைக்காதல் வளர்த்துள்ளார். இவர்  இலங்கையில் இயங்கும் ஒரு மீடியாவில் வேலை புரிவது குறிப்பிடத்தக்கது. இதற்கு பானுசா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார். ஒரு நாள் திடிரென இந்த இளைஞன் தன் நண்பர்களுடன் பானுசா கல்வி கற்கும் பெரதேனியா பல்கலைகழகம் சென்று அவருடன், அவரின் நண்பிகள் முன்னிலையில்  வாக்குவாதம் புரிந்துள்ளார்.  பானுசாவும் ஏன் இவ்வாறு கீழ்த்தரமாக நடக்கிறாய் எனத் கேட்டுள்ளார். அதனை பொருட்படுத்தாத அந்த இளைஞன், பானுசாவின் தொலைபேசியை பறித்துக் கொண்டு யாழ்ப்பாணம் திரும்பியுள்ளார். பானுசாவின் முகப்புத்தகத்தை அவரின் தொலைபேசியிலிருந்தே அவர் போல் பாவிக்க தொடங்கியதுடன் பானுசாவின் உறவினர்களுக்கு தனக்கும் பானுசாவுக்கும் தப்பான உறவு உள்ளதாக மெசேஜ் அனுப்பியுள்ளார்.
11651032_802719609843743_350977747_n
தொலைபேசி பறிபோனதும் பானுசாவின் தந்தையும், அக்காவும் அர்ஜூனன் வீட்டுக்கு போயுள்ளார்கள்.  அங்கு சென்று நியாயம் கேட்ட போது அர்ஜினன் வேலைக்கு சென்று விட்டார் எனவும் இரவு தான் வீட்டிற்கு வருவார் எனவும் அர்ஜினனின் தந்தை தெரிவித்துள்ளார்.  அத்தோடு தனக்கு நல்ல செல்வாக்கு உள்ளதாகவும், தனது மகன் மீடியாவில் வேலை செய்வதாலும் தான் ஒரு மணி நேரத்தில் அந்த யுவதியின் தந்தையை கடத்துவாரெனவும் மிரட்டியுள்ளார். அவர்கள் மேலும் கோவிந்தபிள்ளையிடம் தாங்கள் முகப்புத்தகத்தை  நிறுத்தினாலும் (டிஅக்டிவேட் பண்ணினாலும்) உங்கள் மகன் மீண்டும் அக்டிவேட் செய்து சொந்தக்காரருக்கு தப்பான மெசேஜ் அனுப்புகிறார். தொலைபேசியை தராவிட்டாலும் பரவாயில்லை. அவ்வாறு கீழ்த்தரமான வேலைகளை செய்யவேண்டாம் என கெஞ்சியுள்ளனர்.  கோவிந்தபிள்ளை அவர்களை மிரட்டி வெளியேற்றிவிட்டார்.
11668175_10206732189844554_1353126962_n
அர்ஜூனன் அனுப்பிய மெசேஜ்கள்   உறவினர்கள் முகப்புத்தகங்களில்  உள்ளது. அவர்கள் ஏன் இப்படி கேவலமாக மெசேஞ் பண்ணுகிறீர்கள் எனக் கேட்ட போது தான் அப்படிதான் பண்ணுவன். இதில் என்ன தப்பு இருக்கிறது என பதில் அனுப்பியுள்ளார். பெண் பிள்ளையின் விடயம் என்றதால் தாம் காவல் நிலையம் செல்லவில்லை என பானுசாவின் தந்தை தெரிவித்துள்ளார்.
11647290_802683596514011_707603606_n
பானுசாவின் குடும்பத்தினர், முகப்புத்தக நிறுவனத்துக்கு பல தடவை இப்படி ஒரு நபர் பானுசாவின் முகப்புத்தகத்தை தவறாக பயன்படுத்துகிறார். தாங்கள் பாஸ்வேட் மாற்றம் மற்றும் டிஅக்டிவேசன் எல்லாம் செய்தும் அவர் தொலைபேசியை வைத்திருப்பதால் அக்டிவேட் பண்ணுகிறாரென பலதடவை மெசேஜ் பண்ணியுள்ளார்கள். துர் அதிஸ்டவசமாக பானுசா தூக்கிட்ட அன்றே அவரது முகப்புத்தகத்தையும் முகப்புத்தக நிறுவனம் நிரந்தரமாக டிஅக்டிவேட் செய்துள்ளது. இதற்கிடையில் அவமானம் தாங்க முடியாமல் அந்த மாணவி அவசரமான் முடிவை எடுத்து விட்டார்.
பல்கலை  கழக மாணவியின் இந்த அநியாயமான சாவுக்கு காரணம் என்ன?
11637841_1645341805713190_548204518_n
 தற்கால தொழில் நுட்பமா? இல்லை அதை தவறான வழியில் பயன்படுத்தும் இளைஞர்களா? இல்லை அந்த இளைஞர்கள் தப்பான வழியில் செல்லும் போது தட்டிக் கேட்காத அவர்களின் பெற்றோரா? இல்லை , செல்வாக்கினால் பொலிஸ், சட்டம் இவர்களை தண்டிக்காததா? இல்லை மானத்துக்கு பயந்த அப்பாவி மக்களா?
2012-04-07 இவ்வளவு சாட்சிகள் இருந்தும் இன்னும் அர்ஜூனனை பொலிஸ் விசாரணைக்கேதும் கைது செய்யாதது கவலைக்குரியது. அத்தோடு இலங்கையில் வாழும் ஒவ்வொரு குடிமகனுக்கும் பயத்தை உருவாக்க வேண்டிய விடயம் மட்டுமன்றி காவாலிகள் உருவாக காரணமாகிறது. தான் திருமணம் புரிந்த மனைவியே பிடிக்கவில்லையெனில் விவாகரத்து பெற சட்டம் உள்ளது. ஒருதலைக் காதலுக்கு ஒரு யுவதியை தற்கொலைக்கு தூண்டியது கொடூரம். காதலுக்காக உயிர் நீத்த காலம் மலையேறி இப்போ தாங்கள் காதலிப்பவர்கள் கிடைக்காவிடின் அவர்களை மாய்க்கும் கலிகாலம்.
11647297_802683216514049_915562551_n
வித்தியா, பானுசா  என பெண்கள் பல வழிகளில்  துஸ்பிரயோகம் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே போகிறது. பெண் பிள்ளைகளை வைத்திருக்கும் பெற்றோரின் நிலை இத்தகைய காவாலிக்களுக்கிடையில் மரணப்போராட்டம் தான்.
viththiya-1
 நன்றி ; ஈழக்குரல் புலனாய்வுச் செய்திக்குழு
 http://www.eelakural.com/?p=16927

No comments:

Post a Comment