Friday, June 26, 2015

ஒயின் விடுதி உரிமையாளரை கொடூரமாக கொன்ற அகதி: அதிரடி தீர்ப்பளித்த சுவிஸ் நீதிமன்றம்!

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒயின் விடுதி உரிமையாளரை கொடுமையாக சித்ரவதை செய்து கொலை செய்த அகதி ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
மொரோக்கோ நாட்டை சேர்ந்த 30 வயதான நபர் ஒருவர் கடந்த 2012ம் ஆண்டு பெப்ரவரி மாதம் சட்ட விரோதமாக சுவிஸிற்கு வந்து புகலிடம் கோரி ஆர்கவ் மண்டலத்தில் உள்ள Brittnau நகரில் தங்கி இருந்துள்ளார்.
சில தினங்களுக்கு பின்னர், அகதிகள் முகாமிற்கு வந்த அந்த பகுதியை சேர்ந்த ஒயின் விடுதி உரிமையாளர் ஒருவர், மொரோக்கோ நாட்டு அகதிக்கு வேலை தருவதாக கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்ற இருவரும் மது அருந்துவிட்டு, உரிமையாளரின் படுக்கை அறையில் தகறாரில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், மறுநாளில், அந்த உரிமையாளர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு இருந்ததால் அந்த இடத்தில் இருந்த அகதியை பொலிசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் விசாரணையின்போது ஒயின் விடுதி உரிமையாளர் மது அருந்திவிட்டு தன்னை ஓரினச்சேர்க்கையில் ஈடுப்பட மிரட்டியதால் தன்னை காப்பாற்றி கொள்ள அவரை கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்தார்.
பொலிசார் விசாரணை செய்ததில், விடுதி உரிமையாளர் அடிக்கடி அகதிகள் முகாமிற்கு சென்று தனக்கு பிடித்தமான நபரை அழைத்து வந்து ஓரிணச்சேர்க்கையில் ஈடுப்பட்டது தெரியவந்தது.
மேலும், உரிமையாளரின் படுக்கை அறையில் இரண்டு அகதிகளின் டி.என்.ஏ இருந்துள்ளதை பொலிசார் கண்டுபிடித்துள்ளனர்.
உரிமையாளர் தரப்பு நபர்கள் அளித்த வாக்குமூலத்தில், விடுதி உரிமையாளர் எந்தவிதமான பாலியல் நடவடிக்கையில் ஈடுப்பட வில்லை என்றும், அகதி தான் அவரிடமிருந்த பணத்தை கொள்ளை அடிக்க அவரை கட்டிப்போட்டு கொலை செய்ததாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.
மொரோக்கோ நாட்டு அகதி மீது ஏற்கனவே சில வழிப்பறி புகார்கள் இருந்துள்ளது. மேலும், தற்போது அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், குற்றவாளிக்கு 18 வருடங்கள் சிறை தண்டனையும் அபராதமும் விதிப்பதாக நீதிபதி தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளார்.
 

No comments:

Post a Comment