Friday, June 26, 2015

சாலையோர மெகா ஸ்கிரீனில் ஓடிய ஆபாச படம்..! - அதிர்ச்சியில் மக்கள் (வீடியோ)


கம்யூனிச நாடான சீனாவில் ஆபாசப் படங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. சீனாவின், முடாஞ்ஜியாங் நகரத்தில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில், மெகா சைஸ் திரைகள் வைக்கப்பட்டு விளம்பரம் மற்றும் முக்கிய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 24 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி, மாலை 4 மணி அளவில் திடீர் என திரையில் ஆபாச படம் ஓடியது.
இதனை அவ்வழியே சென்ற இளைஞர்கள் தங்கள் மொபைலில் படம் பிடிக்க தொடங்கினர். சாலையில் நடந்து சென்ற இளம்பெண்கள் கண்களை மூடியவாறு சென்றனர். உடனடியாக, சிலர் உள்ளூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வந்த போலீசார் மெகா சைஸ் திரையின் கேபிளை துண்டித்தனர். அந்த ஆபாச படம் சுமார் 10 நிமிடங்கள் ஓடி உள்ளன. இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் ஆபரேட்டரை கைது செய்தனர். ஸ்மார்ட் போனில் படம் பிடித்த சிலர் அதை சமூக வலைதளங்களில் பதிவேற்றியும் உள்ளனர்.

No comments:

Post a Comment