Saturday, June 27, 2015

எபோலா வைரஸை சில நிமிடங்களிலேயே கண்டுபிடிக்கும் புதிய மருத்துவ சோதனை


உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த 'எபோலா' உயிர்கொல்லி நோய் ஆயிரக்கணக்கானவர்களின் உயிர்களை பலி வாங்கியது. இந்த உயிர்கொல்லி வைரஸை அழிக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ இன்னும் மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஆட்கொல்லி வைரஸை சில நிமிடங்களிலேயே துல்லியமாக கண்டறிந்து விடக்கூடிய புதிய நவீன மருத்துவ சோதனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆர்.டி.டி (Rapid Diagnostic Test (RDT)) என்ற இந்த பல கட்ட மருத்துவ சோதனையில் ஒரு நபருக்கு எபோலா (Ebola Virus Disease (EVD)) இருக்கிறதா? இல்லையா? என்பதை கண்டறிய முடியும். மேலும், இதில் முதற்கட்ட சோதனையை மேற்கொள்ள ஒரு துளி ரத்தமே போதுமானது. எனினும், சில நேரங்களில் ஆய்வு முடிவுகளுக்கு பல நாட்களாகும் வாய்ப்பும் ஏற்படக்கூடும் என்கிறார் அமெரிக்காவின் பாஸ்டன் மருத்துமனையை சேர்ந்த மூத்த ஆய்வாளர் நிரா பொல்லக்.
தற்போதைய முறைப்படி, எபோலா நோய்தொற்றை கண்டறிய பாதிக்கப்பட்டவரின் உடலிலிருந்து எடுக்கப்பட்ட ரத்தத்தை பரவிவிடாமல் மிக எச்சரிக்கையாக பயோ-பாதுகாப்பு முறையுடன் ஆய்வகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது. பிறகு அங்கு மருத்துவ நிபுணர்களால் ஆர்.டி.பி.சி.ஆர் (RT-PCR) சோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்த புதிய மருத்துவ சோதனை ஆய்வு அமெரிக்காவின் பிரபல மருத்துவ இதழான லேண்செட்டில் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment