இங்கிலாந்து நாட்டில் சுமார் 750,000 ஆண்கள் சிறுமிகளுடன் பாலுறவு கொள்வதையே விரும்புகின்றனர் என்று குற்றப்பிரிவு தரப்பில் அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஆண்கள் 750,000-த்திற்கும் அதிகமானோர் சிறுமிகளுடன் பாலுறவு கொள்ளவே மிகவும் ஆர்வமாக இருக்கலாம் என்று குற்றப்பிரிவு விடுத்துஉள்ள எச்சரிக்கையானது, நாட்டில் 35 ஆண்களில் ஒரு ஆண், பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்துக் கொள்ளும் ஒரு ஆபத்தை கொண்டு எதிர்க்கொண்டு உள்ளனர்.
இங்கிலாந்து நாட்டின் தேசிய குற்றப்பிரிவு நடத்திய ஆய்வில் இந்த கொடூரமான தகவல் வெளியாகிஉள்ளது. இதில் மற்றொரு கொடூரமாக சுமார் 250,000 ஆண்கள், பருவம் அடையாத சிறுமிகளால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம் என்ற இங்கிலாந்து குற்றப்பிரிவின் அதிர்ச்சிகரமான தகவல்களை டெய்லி மெயில் வெளியிட்டு உள்ளது.
இதுதொடர்பாக இங்கிலாந்து தேசிய குற்றப்பிரிவு துணை பொது இயக்குநர் பில் கோர்ம்லே பேசுகையில், “எங்களுக்கு அளவு தெரிந்து உள்ளது. இந்த அளவில் எந்த அளவுக்கு உண்மை தன்மை உள்ளது என்பதை கண்டறிவதற்கனாக பணியினை தொடங்கிஉள்ளோம்.
பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் அதிக அளவில் உள்ளனர், இதில் உண்மையென்னவென்றால் அவர்கள் ஒருவரிடம் இருந்து நாம் தூரே ஒதுங்கி வாழமுடியாது.” என்று எச்சரிக்கை விடுத்து உள்ளார்.
எனவே பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பை ஏற்படுத்த புதிய அணுகுமுறைக்கு அழைப்பு விடுத்துஉள்ள அவர், “நான் அனைவரையும் கைதுசெய்தாலும், சிறைவைப்பது என்பது அவர்கள் அதில் இருந்து மீண்டு வருவதற்கு உதவிசெய்யாது என்றும் குறிப்பிட்டு உள்ளார்.
சிறுமிகள் பேஸ்புக் மற்றும் சமூக வலைதளங்கள் வழியாக ஆண்களிடம் பேசும்போதும் இதுபோன்ற இன்னல்கள் வரக்கூடும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. சிறுவர்கள் போன்று பேசி ஏமாற்றுவர்களிடம் இருந்து தப்பித்துக்கொள்ள சிறுவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்த மேம்பாட்டு வழிமுறைகளை அரசு செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்ட உள்ளது. இதுபோன்ற பாலியல் வன் கொடூமை எண்ணம் கொண்டவர்களிடம் இருந்து சிறுமிகளை பாதுகாக்கும், புதிய தொழில் நுட்பங்களை நடவடிக்கையில் ஈடுபட அரசுதீவிரம் காட்டுகிறது என்று கூறப்படுகிறது.
பாலியல் துஷ்பிரயோகங்களில் ஈடுபடுபவர்கள் பெண் குழந்தைகளை துன்புறுத்துவதற்கு முன்னதாகவே அவர்களை சரிசெய்யும் பணியினை ஊக்குவிக்க வேண்டும் என்பது தொடர்பான விவாதம் வேண்டும் என்று மூத்த போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அமைப்புகள் வலியுறுத்தி உள்ளது.
ஆனால் இது மிகவும் சங்கடமான ஆலோசனையானது என்று கோர்ம்லே குறிப்பிட்டு உள்ளார். இதுதொடர்பான பல்வேறு ஆவணங்களை அடிப்படையாக கொண்டு நடத்தப்பட்ட கல்வி ஆராய்ச்சியில் இந்தஅளவானது வெளியே வந்துஉள்ளது.
அனைத்து ஆண்களும் தங்களது மாறுபட்ட ஆசைகளில் விருப்பம் கொண்டு இருக்கவில்லை. பாலியல் துஷ்பிரயோகங்களில் கையாளும், ஒருநிபுணர் தனது அனுபவங்களை மதிப்பிடுகையில், இதில் பாதிபேர் மிகவும் மோசமானது என்பதை ஒத்துக்கொண்டு உள்ளனர் மற்றும் தங்களது உணர்வுகளை கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருகின்றனர் என்று குறிப்பிட்டு உள்ளார்.
ஆய்வில் வெளியாகிஉள்ள எண்ணிக்கை விபரம் தொடர்பாக அதிர்ச்சியை வெளிப்படுத்திஉள்ள இங்கிலாந்து குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு NSPCC, இன்னும் முறைகேடாக எண்ணிக்கை குறைவாக மதிப்பிடப்பட்டு இருக்கும் என்று சந்தேகமும் எழுப்பி உள்ளது. இங்கிலாந்தில் 12 குழந்தைகளில் ஒரு பெண் குழந்தையானது பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டு உள்ளது என்று என்.எஸ்.பி.சி.சி. கூறிஉள்ளது.
இங்கிலாந்தில் பெண் குழந்தைகள் தொடர்பாக ஆபாச படங்களை கூகுள் தேடலில், தேடப்படுவது என்பது கடந்த ஆண்டில் மட்டும் அதிகரித்து உள்ளது என்ற எச்சரிக்கையும் எழுந்து உள்ளது. பிரிட்டனில் மட்டும் சுமார் 3 மில்லியன் முறை இதுபோன்ற தேடல்கள் நடந்து உள்ளது.
கூகுள் தேடலில் பாதிபேர் இதனையே தேடிஉள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகிஉள்ளது. இங்கிலாந்தில் பள்ளிகள், நீதிமன்றம், போலீஸ் நிலையம், குழந்தைகள் பாதுகாப்பு மையம் என பல்வேறு நடவடிக்கை செயல்படுத்தப்பட்டு உள்ளநிலையில், இதுதொடர்பான பிரச்சனையில் வெளியாகி உள்ள அளவானது எங்களை மிகவும் மலைக்க வைப்பதாக உள்ளது என்று இங்கிலாந்து உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்து உள்ளது.
சிறுமிகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் போலீசார் விசாரணை நடத்திவருவது, கடந்த 2012-ம் ஆண்டில் இருந்து 71 சதவீதமாக அதிகரித்து உள்ளது. இதுபோன்ற வழக்குகள் 113,000 ஆக உயர்ந்து உள்ளது என்று கணிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் குழந்தைகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்பாக தேசிய குற்றப்பிரிவு போலீசாரால் விசாரிக்கப்பட்டு உள்ளது.
இங்கிலாந்து சிறையில் உள்ளவர்களில் 6 பேர்களில் ஒருவர் பாலியல் ரீதியான குற்றங்களை செய்துவிட்டு சிறைக்கு வந்தவரே என்ற தகவலும் வெளியாகி உள்ளது. அவர்களை அடைக்க கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் 5 சிறைகள் இருந்தது, தற்போது அது 8 ஆக உயர்ந்து உள்ளது.
பிரிட்டனில் பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பங்களை தடுக்க பிரிட்டனில் ஒரு மந்திரியே நியமனம் செய்யப்பட்டு உள்ளார். பிரிட்டன் வரலாற்றில் இத்துறை கொண்டுவரப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
பிரிட்டனில் பெண் குழந்தைகளை பாதுகாக்க, தொண்டு அமைப்புகள், பெண் மந்திரிகள் பெண்கள் அமைப்புகள் என அனைத்து தரப்பிலும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அரசும் கவனத்துடன் நடவடிக்கைகளை எடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் ஆய்வில் வெளியாகிஉள்ள இத்தகவல்கள் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்திஉள்ளது.
இதுபோன்ற பாலியல் தொல்லைகளில் பாதிக்கப்படும் சிறுமிகள் சுமார் 12 முதல் 16 வயது கொண்டவர்களே, அதற்கும் குறைவான வயது கொண்ட குழந்தைகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மூன்று மாதங்களுக்கு முன்னதாக அந்நாட்டு உள்துறை செயலாளர் தெரேசா, பிரிட்டன் அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார். பெண் குழந்தைகள் பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தப்படும் விவகாரத்தில் உண்மையான அளவை பிரிட்டன் இன்னும் உணரவில்லை என்று கூறியிருந்தார்.
எல்லா வகையிலான சமூகத்திலும் இந்த தொல்லையானது உள்ளது என்றும் குறிப்பிட்டு இருந்தார். கடந்த வாரம் பிரிட்டன் குழந்தைகள் பாதுகாப்பு மையம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், பாதுகாப்பில்உள்ள, மைனர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
போலீஸ் அதிகாரிகள் தரப்பில் நடத்தப்பட்ட ஆய்வில், 2012-ம் ஆண்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியிலான தொல்லை வழக்கு 66,120 ஆக இருந்தது. அதுவே 2015-ம் ஆண்டில் என்பது 113,291 ஆக கணிக்கப்பட்டு உள்ளது. சுமார் 165 சதவீதம் உயர்ந்து உள்ளது.
பிரிட்டனில் இத்துறைக்கு முதல்முறையாக மந்திரியாக நியமனம் செய்யப்பட்டு உள்ள கரேன் பிராட்லி, தனக்கு நேர்ந்த அவலங்களையும் எடுத்துக்கூறி, இணையதளத்தின் தீமையும் எடுத்துகூறி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க போராடுவதாக தெரிவித்து உள்ளார். டெய்லி மெயில் வெளியிட்டு உள்ள செய்தியில் பிராட்லி தனது நடவடிக்கையை முழுமையாக எடுத்து உரைத்து உள்ளார்.