Saturday, May 16, 2015

மாணவிகளின் குட்டை பாவடை: கவனத்தை சிதறவிடும் ஆசிரியர்கள்

பிரித்தானியாவில் உள்ள ஒரு பள்ளியில் மாணவிகள் குட்டை பாவாடை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பிரித்தானியாவின் கிழக்கு யோர்க்ஸிரி(East yorkshri) பகுதியில் உள்ள பிரிட்லிங்டன்(bridlinton) பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் பள்ளியின் தலைமையாசிரியர் சாரா பாஷ்லே மாணவிகள் பள்ளிக்கு குட்டை பாவடை அணிந்துவர தடைவிதித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மாணவிகள் முழங்காலுக்கு மேல் குட்டை பாவாடைகள் அணிந்து வருகின்றனர்.
இது ஆண் ஆசிரியர்களின் கவனத்தை சிதறடிக்கின்றது. இதனால் அவர்களால் சரியாக பாடம் சொல்லிக் கொடுக்கமுடியவில்லை.அதனால் தான் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதற்கு மாணவிகள் மற்றும் பெற்றோர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இது பற்றி ஒரு மாணவியின் தாய் கூறுகையில், பள்ளி நிர்வாகத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சி அளிக்கின்றது. நாகரீகமான முறையில் குட்டை பாவாடை அணிவதில் தவறேதுமில்லை. எனினும் முழங்காலுக்கு மேல் அணிவது தவறு தான் என்று தெரிவித்துள்ளார். பள்ளி நிர்வாகத்தின் இந்த முடிவால் மாணவிகள் அதிர்ப்தி அடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment