Tuesday, May 19, 2015

இன்டர்நெட் சென்டரில் குழந்தையை பிரசவித்துவிட்டு அசராமல் ஹேம் விளையாடிய பெண்!

இன்டர்நெட் சென்டரில் சீனப்பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துவிட்டு மீண்டும் வீடியோ ஹேம் விளையாடிய சம்பவம் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷடோங் மாகாணத்தைச் சேர்ந்த 24 வயது கர்ப்பிணி பெண் ஒருவர், தனது குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சியான்சி மாகாணத்தின் தலைநகரான நன்சாங் நகரில் உள்ள இன்டர்நெட் சென்டருக்கு வந்துள்ளார்.
அங்கு கணியில் வீடியோ ஹேம் மூலம் பொழுதை கழித்துக் கொண்டிருந்த அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டுள்ளார். அப்போது தான் அங்கு இருந்தவர்கள் அந்த பெண் நிறைமாத கர்ப்பிணி என்பதை அறிந்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து அந்த பெண் அங்குள்ள கழிவறைக்குச் சென்று சிரமப்பட்டு தனது குழந்தையை பிரசவித்துள்ளார்.
பின்னர் அங்குள்ளவர்கள் கொடுத்த தண்ணீரால் குழந்தையை சுத்தம் செய்துள்ளார். இதனையடுத்து சற்றும் தளராத அந்த பெண், பிரசவித்த குழந்தையை ஓரமாக வைத்து விட்டு மீண்டும் வீடியோ ஹேம் விளையாட சென்றுவிட்டார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்தவர்கள் ஆம்புலன்சை வரவைத்துள்ளனர். அப்போதும் அந்த பெண் ஸ்ட்ரட்சரில் செல்லாமல் நடந்தே ஆம்புலன்சில் ஏறியதாக கூறப்படுகிறது.

No comments:

Post a Comment