Friday, May 1, 2015

இதுவரை எவரும் காணாத கொலைக்களம் நடைபெறும் இடத்தின் படங்கள் வெளியானது ! ]


இந்தோனேசியாவில் உள்ள ஜாவா தீவுகளில் ஒன்றுதான், நுசாகம்பங்­ ஆகும். இங்கே தான் தண்டனை நிறைவேற்றப்படும் சிறைச்சாலை உள்ளது. இச்சிறைச்சாலைக்கு உள்ளே கைதியாகச் சென்றவர்கள் இதுவரை உயிரோடு திரும்பியது என்பது மிக மிக அரிதாக உள்ளது. சிறைச்சாலைக்கு உள்ளே எப்படி இருக்கும் என்று எவருக்கும் தெரியாது. கைதிகள் சந்திக்கும் இடம் அதுமட்டுமே புகைப்படங்களாக வெளியாகியுள்ளது. இதுவரை சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று கூட எவருக்கும் தெரியாது. அதுபோக மரண தண்டனைக் கைதிகளை சுடும் இடத்தை வெளியே இருக்கும் எவரும் இதுவரை பார்த்ததே இல்லை. ஆனால் தற்போது அந்த இடத்தின் புகைப்படம் முதன் முதலாக வெளியாகியுள்ளது.
உள்ளே வேலை செய்யும் காவலாளி ஒருவர் தனது மோபைல் போனில் குறித்த அந்த இடத்தை படம் எடுத்து பெருந்தொகைப் பணத்திற்கு விற்றுள்ளார். இது சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது எனலாம். 10 மீட்டருக்கு அப்பால் நின்று துப்பாக்கியால் சுடும் குழு , சுடும் வேளையில் ஒரு மீட்டருக்கு ஒருவர் என்ற விகிதத்தில் மரண தண்டனைக் கைதிகள் அங்கே நிற்க்கவைத்திருப்பார். அந்த இடம் நீல நிற தகரத்தால் ஆன ஒரு சிறிய கொட்டகை ஆகும். அதன் கீழ் தான் கைதிகள் கை கட்டப்பட்ட நிலையில் நின்றிருப்பார்கள். அதன் பின்னால் ஒரு சிலுவையும் இருக்கிறது.
பல ஆண்டுகளாக வெளியே வராத இந்த இடத்தின் , புகைப்படங்கள் தற்போது வெளியாகி பெரும் அதிர்சியை தோற்றுவித்துள்ளது. அதுபோக இந்தோனேசியாவுக்கு இது சவாலாகவும் அமைந்துள்ளது என்கிறார்கள். இது ஒரு பாதுகாப்பு பிரச்சனை என்பதற்கு அப்பால் , இந்தோனேசிய ரகசியமும் வெளியே வந்துவிட்டது அல்லவா. அதுபோக , இந்த தீவில் சில மர்மங்கள் உள்ளது. குறித்த இந்த தீவில் வசிக்கும் மக்கள்(பழங்குடியினர்) தான் அந்த சிறையின் காவலாளிகளாக உள்ளார்கள். அவர்களில் சிலர் தான் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லும் தொழிலை மேற்கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள். இவர்களில் பலர் இந்தோனேசியாவை விட்டு வெளியே வேறு எந்த நாட்டிற்கும் சென்றதே இல்லை. பல தாசாப்த்தங்களாக அவர்கள் அங்கே தான் தனியாக வசித்து வருகிறார்கள். இவர்கள் கொலைவெறி பிடித்த ஆட்கள் எனவும். இவர்கள் மரபணுக்களில் கொலைவெறி நாட்டம் கலந்துள்ளது எனவும் கூறப்படுகிறது.
இதுபோன்ற கொடுமையான இடம் ஒன்று பூமியில் இல்லை என்கிறார்கள். ஆனால் இதனை இந்தோனேசிய அரசு , தனது சட்டம் என்று கூறுகிறது. மேலும் இந்தக் கொலைவெறியர்களுக்கு இரையாக்க தான் , பலருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது என்கிறார்கள், ஆதிவாசிகளுடன் பழகும் சிலர். இது எந்த அளவு உண்மை என்று தெரியவில்லை. பிரேசிலை சேர்ந்த ஊடகவியலாளர் ஒருவர் இதுபோன்ற தகவலை பெற்று வெளியிட்டுள்ளார். அதிர்வின் வாசகர்களுக்காக தமிழாக்கம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment