Saturday, May 2, 2015

மையூரனின் வக்கீல் இந்தோனேசியாவில் கைது ! திடீர் திருப்பம் ! ]


மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோரின் உடல்கள் , குவாண்டஸ்- 42 (அவுஸ்திரேலியாவின் உதியோகபூர்வ விமானசேவை) மூலமாக இன்று அதிகாலை சிட்னி சென்றடைந்துள்ளது. இதேவேளை மையூரன் மற்றும் அன்று சான் ஆகியோர் சார்பாக முதலில் வாதாடிய "மொகமெட் ரிவான்" என்னும் வக்கீலை , அதிரடியாக இந்தோனேசியப் பொலிசார் இன்று கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். மையூரன் வழக்கில் , மரணதண்டனை வழங்கிய நீதிபதிகள் அந்த தண்டனையை ரத்துச் செய்து அதனை 20 வருட சிறைத்தண்டனையாக மாற்ற 1 பில்லியன் டாலரைக் கோரினார்கள் என்ற தகவலை மொகமெட் ரிவான் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். இதனை சகித்துக்கொள்ள முடியாத இந்தோனேசிய அரசு அவரையும் தற்போது கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளது.
இதேவேளை சர்வதேச சட்டம் மற்றும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தோடு ஒரு உடன்படிக்கையில் இந்தோனேசியா கைச்சாத்திட்டுள்ளது. 2006ம் ஆண்டு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தோனேசிய அரசு கைச்சாத்திட்டுள்ளது. இதன் அடிப்படையில் பாரிய மற்றும் படுமோசமான குற்றங்களை புரிந்தவர்களுக்கு மட்டுமே , மரண தண்டனை வழங்க முடியும் என்று சர்வதேச சட்டம் கூறுகிறது. ஆனல் அதனை தற்போது உள்ள இந்தோனேசிய அரசு மீறிவிட்டதாக இன்று அவுஸ்திரேலியா குற்றஞ்சாட்டியுள்ளது. அதுமட்டும் அல்லாது அவுஸ்திரேலியா இதனை விட்டபாடாக இல்லை. சர்வதேச நீதிமன்றில் , இந்தோனேசியாவுக்கு எதிராக வழக்கு தொடர ஆராய்ந்தும் வருகிறது என அதிர்வு இணையம் மேலும் அறிகிறது.
இதுதொடர்பான பிரேரணை ஒன்று நாளை மறுதினம் அவுஸ்திரேலிய பாராளுமன்றில் கொண்டுவரப்படவுள்ளது. அது நிறைவேறும் பட்சத்தில் அவுஸ்திரேலியா சட்ட நடவடிக்கையில் இறங்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. மையூரன் மற்றும் அன்று சானின் விடையம் இவ்வளவு பெரிய பூதாகரமாக மாறும் என்று இதுவரை இந்தோனேசிய எண்ணிப்பார்கவில்லை. அவர்கள் நினைத்ததை விட சிக்கல் தற்போது பெரிதாகியுள்ளது. இதற்கு முழுக்காரணம் அன் நாடு 2006ம் ஆண்டு சர்வதேச ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டது தான். எங்கிருந்தோ அதனை தூசி தட்டி தற்போது கையில் எடுத்துள்ளது அவுஸ்திரேலியா. அத்தோடு உள்ளூர் வக்கீலை கைதுசெய்துள்ளதையும் அவுஸ்திரேலிய வன்மையாக கண்டித்துள்ளது.
உள்ளுர் வக்கீலான மொகமெட் ரிவான் , நீதிபதிகள் பணம் பெற்றுக்கொள்ள பேரம் பேசினார்கள் என்றும் அது தனக்கு தெரியும் என்றும் கூறியுள்ளார். பணத்தைப் பெற்றுக்கொண்டு தண்டனையை 20 வருடங்களாக குறைக்க அவர்கள் எத்தணித்தும் உள்ளார்கள். இச்செய்தியானது இந்தோனேசிய அரசின் முகத்தில் கரியைப் பூசியுள்ளது. இதுதொடர்பான மேலதிகச் செய்திகள் பல வரவுள்ளது. அதுவரை அதிர்வின் செய்திகளோடு இணைந்திருங்கள்.
http://athirvu.com/newsdetail/3108.html

No comments:

Post a Comment