Sunday, May 10, 2015

சுவிஸில் நடந்த மராத்தான் ஓட்டம்: தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்புக்காக ஓடிய தமிழின உணர்வாளர்கள்

சுவிஸில் நடந்த மராத்தான் ஓட்ட பந்தயத்தில், தமிழின அழிப்பிற்கு எதிரான கவனயீர்ப்பை ஏற்படுத்த கலந்து கொண்ட தமிழின உணர்வாளர்கள் 3 பேர் பதக்கங்களைப் பெற்றுள்ளனர்.
பேர்ன் நகரில் சனிக்கிழமை (09.05.2014) அன்று "பேர்ன் க்ராண்ட் பிறிக்ஸ் 2015 (GRAND PRIX BERN 2015) என்ற பெயரில், 16.093 கி.மீ ஓட்டப்பந்தயம் நடந்துள்ளது.
ஏறத்தாழ 16,000 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த போட்டியில், சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் பங்கேற்ற தமிழின உணர்வாளர்கள், தமிழின அழிப்பிற்கு எதிரான கவனத்தை ஈர்க்கும் வகையில் ”ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற இன அழிப்புக்கு எதிரான ஓட்டம்" எனும் வாசகங்களைத் தமது டீ சேர்ட்டில் பொறித்திருந்தனர்.
போட்டிக்கு முன்பு தமிழின உணர்வாளர்கள், "மே 18 தமிழின இன அழிப்பு நாளை" நினைவுகூர்ந்து "தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்" என்ற தாரக மந்திரத்துடன் உறுதிமொழி எடுத்து பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இந்த கவன ஈர்ப்பு ஓட்டத்தின் போது, ஸ்ரீலங்கா அரசின் தமிழின அழிப்பு சார்ந்த விளக்க துண்டுப் பிரசுரங்களும் பார்வையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டன‌.
இக்கவனயீர்ப்பு மராத்தான் ஓட்டம் கலந்துகொண்ட போட்டியாளர்கள், மற்றும் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த மராத்தான் ஓட்டத்தினை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கண்டுகளித்தனர்.

No comments:

Post a Comment