Sunday, May 10, 2015

நேபாளத்தில் இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம்: மக்கள் பீதி

[ மாலைமலர் ]
ஏப்ரல் 25, நேபாளத்தையே உலுக்கிய பூகம்பத்தினால் ஏற்பட்ட பயத்தின் காரணமாக பொதுமக்கள் அனைவரும் வெட்டவெளியில் முகாமிட்டு தங்கியிருக்கும் நிலையில், இன்று காலை அடுத்தடுத்து 3 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது மக்களை மேலும் பீதியடையச் செய்துள்ளது.
இன்று அதிகாலை 1.50 மணிக்கு காத்மாண்டுவில் இருந்து 100 கி.மீ கிழக்கில் உள்ள சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.2 என்ற ரிக்டர் அளவில் பூகம்பம் ஏற்பட்டது. சிந்துபல்சவுக் பூகம்பத்தால் மோசமாக பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
2.44 மணியளவில் உதய்பூர் மாவட்டத்தில் 4 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. விடியற்காலை 6.34 மணிக்கு சிந்துபல்சவுக் மாவட்டத்தில் 4.4 ரிக்டர் அளவிற்கு மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டதாக காத்மாண்டுவில் உள்ள தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 25-ல் ஏற்பட்ட கொடூர பூகம்பத்தால் இதுவரை 8019 பேர் பலியாகியுள்ளனர். 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இன்று ஏற்பட்ட பூகம்பத்தினால் உயிர்சேதம் எதுவும் ஏற்படாத நிலையிலும் வெட்டவெளியில் தங்கியிருக்கும் பொதுமக்களின் பயம் மேலும் அதிகரித்துள்ளது.

No comments:

Post a Comment