Sunday, May 10, 2015

கொழும்பில் 22 குடும்பங்கள் இடம் பெயர்வு!

அதிக மழை காரணமாக கொழும்பு மாவட்டத்தில் 22 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இடம் பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இவ்வனர்த்தத்தினால் இடம்பெயர்ந்த 22 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி கூறியுள்ளார்.
அத்தோடு மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான அபாயம் உள்ளதனால் மக்களை விழிப்புடன் செயற்படுமாறு  அவர் எச்சரித்துள்ளார்.
இதேவேளை மின்னல் தாக்கம் காரணமாக இவ் வருடத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளதென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தகவல் வெளியிட்டுள்ளது.
அத்தோடு இன்று மாலை வேளையில் நாட்டின் பல பாகங்களில்  கடும் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் அதிகளவு மழை வீழ்ச்சி பொலன்னறுவை மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளது.
இதுவரை நேரமும் பெய்த மழையின் வீழ்ச்சியானது பொலன்னறுவையில் மட்டும் 44.8 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment