Wednesday, April 29, 2015

ஒட்டகத்தில் செல்லும்போது கூட கணவன் அழைத்தால் செக்ஸ் செய்யவேண்டுமாம் : சர்சையான கருத்து !

கணவன் அழைக்கும் வேளையில் எல்லாம் அவர்களின் ஆசைக்கு முஸ்லிம் பெண்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்னும் பொருள்படும் வகையில் மலேசிய தலைமை மதகுருவான பெராக் முப்தி டான் ஸ்ரீ ஹருஸ்ஸானி சகாரியா சமீபத்தில் வெளியிட்டுள்ள மத உத்தரவான ‘பத்வா’ கடும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.பெண்களின் சம்மதம் இல்லாமல் அவர்களுடன் உடலுறவில் ஈடுபடுவது கற்பழிப்புக்கு ஒப்பான செயலாகும் என உலகம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் பொதுகருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ‘பத்வா’ வெளியிட்டுள்ள இவர், 'மஹர்’ என்னும் சீதனப்பணம் தந்து வாங்கப்படும் முஸ்லிம் பெண்களுக்கு கணவனின் ஆசைக்கு மறுப்பு தெரிவிக்கும் உரிமை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
கணவன்-மனைவி இடையிலான திருமண வாழ்க்கையில் கற்பழிப்பு என்று ஏதும் இல்லை. அது, ஐரோப்பிய கலாசாரம். அதை நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? வீட்டு விலக்கு (அந்த மூன்று நாட்கள்) தவிர கணவன் அழைக்கும் நேரத்தில் எல்லாம் மனைவி உடன்பட வேண்டும். ஒட்டகத்தின் மீது பிரயாணம் செய்து கொண்டிருக்கும் வேளையிலும் அவள் இணங்கியே தீர வேண்டும். அப்படி இணங்க மறுக்கும் மனைவியை பலவந்தமாக அடையும் உரிமை கணவனுக்கு உண்டு என பெராக் முப்தி டான் ஸ்ரீ ஹருஸ்ஸானி சகாரியா தெரிவித்துள்ளார்.
இந்த கருத்து மலேசிய முஸ்லிம்கள் உள்பட பலரது மத்தியில் கடும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது. இதுபற்றிய செய்தி வெளியான 'மலாய் மெயில் ஆன்லைன்’ தளத்தில் தங்களது எதிர் விமர்சனத்தை பலர் பதிவு செய்து வருகின்றனர்.குர் ஆன் வசனங்களை மேற்கோள் காட்டி, ஆண்களுக்கு வசதியான இதுபோன்ற கருத்துகளை தேடி கண்டுபிடித்து, வெளியிடும் இவர், அதே குர் ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பெண்களை எத்தனை கண்ணியமாக நடத்த வேண்டும் என்பது தொடர்பாக மூச்சு விடாதது ஏன்? என சில வாசகர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒரு வாசகர், பொது இடத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது தொடர்பாக இவரது நிலைப்பாடு என்ன? என்றும், இன்னொருவர் சற்று வரம்புமீறி, ‘ஒட்டகத்தின் மீது பயணிக்கும் வேளையில் உடலுறவு வைத்துக் கொள்ள முடியுமா?’ என்று நைய்யாண்டியும் செய்துள்ளார். அரபு நாட்டை சேர்ந்த ‘அல் அரேபியா டாட்நெட்’ இணையதளம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த இணையதளத்துக்கு அரபு நாடுகள் மற்றும் ஆசிய கண்டத்தில் உள்ள பல்வேறு நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான வாசகர்கள் உள்ளது, குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment