Thursday, April 16, 2015

பிரபாகரன் எங்கள் கண்ணில் விரலைவிட்டு ஆட்டினார்: இந்திய இராணுவத்தளபதி !

இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்ப 1987ம் ஆண்டு அப்போதைய அரசால் எடுக்கப்பட்ட தீர்மானம், இந்தியாவின் கொள்கை வகுப்பில் ஏற்பட்ட பெரும் தோல்வி. முட்டாளத்தனமான முடிவு. இவ்வாறு கூறியுள்ளார் இந்திய மத்திய அமைச்சரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான வி.கே.சிங். நிகழ்வொன்றில் பேசும்போதே இவ்வாறு கூறியதாக பி.ரி.ஐ செய்திச்சேவை கூறியுள்ளது.
இலங்கைக்கு இந்தியப்படைகளை அனுப்பும் தீர்மானம் அப்போதைய இந்திய அரசின் கொள்கையில் மிகப்பெரிய தோல்வி. இலங்கை அரசுக்கும் புலிகளிற்குமிடையில் மோதல் நடந்து கொண்டிருந்த நிலையில் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது. இந்திய இராணுவம் புலிகளின் தலைவர் பிரபாகரனை ,பிடிக்க பலமுறை முயன்றது. ஆனால் ஒவ்வொருமுறையும் அவர் பாதுகாப்பாக தப்பிக் கொண்டார். இறுதியாக சுமார் 1 லட்சம் இந்தியப் படையினர் வன்னிக் காடுகளை முற்றுகையிட்டு பிரபாகரனை உயிரோடு பிடிக்க முற்பட்டார்கள். ஆனால் அன்றைய தினம் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் புத்திசாலித்தனம் வெளியானது.
அவர் பிரேமதாசாவிடம் பேசியதை அடுத்து , இலங்கை இந்திய ஒப்பந்தத்தை அவர் கிழித்து எறிந்தார். இலங்கை மண்ணை விட்டு இந்திய ராணுவம் வெளியேறவேண்டும் என்று கூறினார். இதனால் தமது பாரிய தாக்குதலை அப்படியே நிறுத்திவிட்டு இந்திய ராணுவம் வெளியேறியது. ஒட்டு மொத்தத்தில் இந்திய ராணுவத்தின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய நபர் பிரபாகரன் தான் என்பதில் சந்தேகமே இல்லை எனலாம்.

No comments:

Post a Comment