Monday, April 27, 2015

செயற்கை கல்லீரல் உருவாக்கி சாதனை: அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானிக்கு விருது

அமெரிக்க வாழ் இந்திய பெண் விஞ்ஞானி ஒருவருக்கு செயற்கை கல்லீரல் உருவாக்கியதற்காக 2,50,000 அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான விருது வழங்கப்படவுள்ளது.
அமெரிக்க வாழ் இந்தியர் சங்கீதா பாட்டியா Massachusetts Institute of Technology-வில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார்.
இவர் தற்போது செயற்கையாக மனித கல்லீரலை உருவாக்கியுள்ளார். இதன் மூலம் நோய்களை குணமாக்க எந்த வகையான மருந்து பயன்படுத்தலாம் என்பது குறித்து சோதனை நடத்த முடியும்.
இதற்காக அவருக்கு 2015–ம் ஆண்டுக்கான Heinz Award அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை Massachusetts Institute of Technology அறிவித்துள்ளது.
விருதுடன் ரூ.1 கோடியே 50 லட்சம் (2,50,000 அமெரிக்க டொலர்கள்) பரிசு தொகையும் அவருக்கு வழங்கப்படுகிறது.
ஏற்கனவே இவர் செயற்கை கல்லீரலுக்கு மலேரியா நோய் சிகிச்சைக்கான மருந்தை வழங்கி முற்றிலும் குணமடைய செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த விருதினை வரும் மே மாதம் 13ம் திகதி, Pittsburgh-ல் நடைபெறவுள்ள விழாவில் வழங்கவுள்ளனர்.

No comments:

Post a Comment