Wednesday, April 29, 2015

இவர்கள் தான் மையூரனை சுட்டு தண்டனையை நிறைவேற்றிய படையினர் ?


இன்று அதிகாலை சுமார் 1.25 மணிக்கு(இந்தோனேசிய நேரப்படி) மையூரன் மற்றும் அன்ரூ ஆகியோர் , துப்பாக்கி சுடும் நபர்களால் சுடப்பட்டு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வெள்ளை நிற சவப்பெட்டியில் அவர்களது உடலை வைத்து அதனை வெளியே எடுத்துவந்துள்ளார்கள் காவலாளிகள். மேலும் இவ்விருவரையும் துப்பாக்கியால் சுட்டு கொலைசெய்த நபர்களும் கூடவே ஒரு வெள்ளை வேனில் வெளியே வந்து சென்றுள்ளார்கள். இவர்களை ஊடகவியலாளர்கள் விரட்டி விரட்டி படம் பிடித்துள்ளார்கள்.
இந்தோனேசியாவில் கொலைசெய்யப்பட்ட 8 பேரில் , சிலரது உடல்களை அவர்கள் அங்கேயே அடக்கம் செய்துவிட்டார்கள் என்று கூறப்படுகிறது. இன் நிலையில் , மையூரன் மற்றும் அன்ரூவின் உடல்களை அவுஸ்திரேலியா எடுத்துச் செல்ல அவுஸ்திரேலிய அரசு கடும் முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று அதிகாலை அதிரடியாக அவுஸ்திரேலிய பிரதமர் அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளார். இந்தோனேசியாவுக்கான அவுஸ்திரேலிய தூதுவரை அவர் திருப்பி அழைத்துள்ளார். மேலும் இந்த வருடம் 600 மில்லியன் டாலர்களை அவுஸ்திரேலியா இந்தோனேசியாவுக்கு உதவியாக கொடுக்க இருந்தது அதுவும் ரத்துச் செய்யப்பட உள்ளது. மேலும் இந்தோனேசிய கடல்படையை அவுஸ்திரேலியா தான் பல வருடங்களாக பயிற்றுவித்து வருகிறது.
அதற்கும் முட்டுக்கட்டை போடப்பட இருப்பதோடு , இனி இந்தோனேசிய பொலிசாருக்கு அவுஸ்திரேலிய பொலிசார் உதவப்போவது இல்லை என்ற பல தீர்மானங்கள் எடுப்பட்டவுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்தோனேசியாவின் தேசிய கொடியில் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களே உள்ளது. இறுதியாக மையூரன் வரைந்த படத்தில் , இந்தோனேசிய தேசிய கொடியில் இருந்து , ரத்தம் சிந்துவதுபோல பொருள்படும் விதத்தில் அதனை வரைந்துள்ளார். இந்த ஓவியத்தையும் சிறை அதிகாரிகள் எடுத்து உறவினர்களிடம் கொடுத்துள்ளார்கள். இதேவேளை பிரான்ஸ் , பிரேசில் ஆகிய நாடுகளும் கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அன் நாடுகள் , இனி எந்த பொருளாதார தடைகளை கொண்டுவரும் என்று தெரியவில்லை என்கிறார்கள்.

No comments:

Post a Comment