Thursday, April 23, 2015

மாணவருடன் காதல் கொண்ட ஆசிரியை: விருப்பப்படி வாழ அனுமதி அளித்த நீதிமன்றம்!

திண்டுக்கல்லில் இருந்து மாணவருடன் ஓடிச்சென்ற ஆசிரியை நீதிமன்றத்தில் ஆஜர் ஆகியுள்ளார்.
திண்டுக்கலை சேர்ந்த தேவராஜ் என்ற கூலித் தொழிலாளியின் மகள் செபாஸ்டின் சாரதி (22), ஆசிரியை பயிற்சியை முடித்துவிட்டு தனியார் பயிற்சி கல்லூரியில் (டுட்டோரியல்) வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் அதே கல்லூரியில் படித்து வந்த திண்டுக்கலை சேர்ந்த 18 வயது மாணவர் ஒருவருடன் அந்த பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட்டு காதல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.
இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு காவல் நிலையத்தில் செபாஸ்டின் சாரதியின் தந்தை தேவராஜ் புகார் செய்ததால், ஆசிரியையை கடத்தி சென்று விட்டதாக மாணவர் மீது வழக்குப்பதிவு செய்து பொலிசார் தேடி வந்தனர்.
பின்னர் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நாயக்கன்பட்டி கிராமத்தில் இருந்த அவர்களை மடக்கி பிடித்த பொலிசார், அவர்களை திண்டுக்கல் 1–வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.
நீதிமன்றத்தில் பேசிய அந்த பெண், தன்னை யாரும் கடத்தவில்லை என்றும், தான் விருப்பப்பட்டு மாணவருடன் சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது விருப்பப்படி, அந்த மாணவனுடன் சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை ஏற்ற நீதிபதி, அவரது விருப்பப்படி வாழ்வதற்கு உத்தரவு பிறப்பித்ததால் அந்த மாணவருடன், ஆசிரியை செபாஸ்டின் சாரதி சென்றுள்ளார்.

No comments:

Post a Comment