Sunday, April 12, 2015

அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க சுவிஸின் புதிய திட்டம்

சுவிஸிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக புதிய வாக்கெடுப்பு நடத்துவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதரக அதிகாரி தெரிவித்துள்ளார்.
சுவிஸிற்கு வரும் அகதிகளின் எண்ணிக்கையை குறைப்பது தொடர்பாக கடந்த வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் பெரும்பாலான நபர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர்.
இந்த வாக்கெடுப்பு தொடர்பான பேச்சுவார்த்தைகளை நிராகரித்த ஐக்கிய ஒன்றியத்தின் தூதரக அதிகாரியான Maciej Popowski, தற்போது புதிய வாக்கெடுப்பு நடத்துவது என்பது தவிர்க்க முடியாதது என கூறியுள்ளார்.
கடந்த வாரம் தனியார் பத்திரிகை ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், அகதிகள் குறித்த விவகாரங்களுக்கு எதிர்வரும் 2016 ஆம் ஆண்டிற்குள் சுவிட்சர்லாந்து உறுதியான முடிவு ஒன்றை மீண்டும் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தற்போது முடிவெடுக்கும் சூழ்நிலை சுவிஸ் அரசிடம் உள்ளதால், அகதிகள் குறித்த அரசின் அனுகுமுறைகளை மாற்ற முயற்சிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த வருடம் பெப்ரவரி 9 ஆம் திகதி, சுவிட்சர்லாந்து நாட்டிற்கு அதிக எண்ணிக்கையில் வரும் அகதிகளை குறைக்கும் வகையில் Swiss People’s Party வாக்கெடுப்பை நடத்தியது.
இந்த வாக்கெடுப்பில் சுமார் 50.3 சதவிகித மக்கள் அகதிகளின் எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தி வாக்களித்தனர்.
இந்த வாக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு எல்லை தாண்டி பணிக்கு வருபவர்கள் மற்றும் வெளிநாட்டு அகதிகளுக்கான புதிய ஒதுக்கீடு அறிக்கையை சுவிஸ் அரசு தயாரித்திருந்தது.
ஆனால், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஐக்கிய ஒன்றியம் (European Union) தற்போது புதிய வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று சுவிஸ் அரசை வலியுறுத்தியுள்ளது.


அதிகரிக்கும் சட்டவிரோத குடியேற்றம்: கலக்கத்தில் அதிகாரிகள்
[ ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2015, 02:02.47 பி.ப GMT ]
கொசோவோ நாட்டிலிருந்து சட்டவிரோதமாக சுவிஸில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோதமாக சுவிஸில் நுழையும் முதல் பத்து நாடுகளின் பட்டியலில் இருக்கும் ஒரே ஐரோப்பிய நாடு கொசோவோ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையே சுவிஸில் சட்டவிரோதமாக நுழைந்த நாடுகளின் பட்டியலில் காம்பியா(Gambia) 444 நபர்களுடன் முதல் இடத்திலும், 369 நபர்களுடன் கொசோவோ(Kosovo) இரண்டாவது இடத்திலும் உள்ளது.
மேலும், 250 நபர்களுடன் நைஜீரியாவும்(Nigeria), 194 நபர்களுடன் செனகல்(Senegal) நாடுகளும் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
கடந்த மூன்று மாதங்களில் மட்டும் வெளிநாடுகளிலிருந்த சட்டவிரோதமாக சுவிஸிற்கு நுழைய முயன்ற சுமார் 3,280 நபர்களை எல்லை கண்காணிப்பு பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய எல்லை கண்காணிப்பு பொலிஸ் குழுவின் செய்தி தொடர்பாளர் Attila Lardori, தங்களுடைய நாடுகளில் நிலவும் பொருளாதார பிரச்சனைகள், தங்களது தாய் நாடுகளின் வரலாற்று சிறப்புகளை சரிவர உணராத காரணங்களால் வெளிநாட்டினர் சுவிஸில் சட்டவிரோதமாக நுழைந்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு காரணமாக சுவிஸ் அதிகாரிகள் கொசோவோ நாட்டினர்களின் விண்ணப்பங்களை 48 மணி நேரத்தில் நிராகரித்து திருப்பி அனுப்பி விடுவதால், இதுபோன்ற சட்டவிரோத நடவடிக்கையில் அவர்கள் ஈடுபடுவதாக Attila Lardori தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 3 மாதங்களில் ஆட்களை சட்டவிரோதமாக கடத்தி வந்ததாக சந்தேகப்பட்டு கைது செய்யப்பட்ட 91 நபர்களில், 27 நபர்கள் கொசோவோ நாட்டை சேர்ந்தவர்கள் என புள்ளியல் துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
http://www.coolswiss.com/view.php?22eOld0bcEa0Qd4e34MC302cBnB3ddeZBn5302egAA2e4q0asacb3lOK43
அகதிகளுக்கு இடம் கொடுங்கள்: சுவிஸ் மக்கள் வலியுறுத்தல்
[ செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2015, 07:33.41 மு.ப GMT ]
சுவிட்சர்லாந்து நாட்டிற்கு தஞ்சம் கோரி வரும் அகதிகளுக்கு அமைதியையும் உரிய இடத்தையும் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஈஸ்டர் திருநாளில் Bern நகரில் உள்ள Kirchenfeld என்ற பாலம் வழியாக நடந்த ஊர்வலத்தில் சுமார் 450 சமூக ஆர்வலர்கள் கலந்துக்கொண்டனர்.
ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள், சுவிஸிற்கு வரும் வெளிநாட்டு அகதிகளுக்கு தகுந்த அந்துஸ்த்துகளை வழங்கி அவர்களின் மரியாதையை காக்கும் வகையில் அவர்களுக்கு உரிய இடத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
உலகம் முழுவதும் சுமார் 51 மில்லியன் மக்கள் போர் காரணங்களாலும், அடிப்படை வசதிகள் கிடைக்காததாலும் தாய் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு தஞ்சம் கோரும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2014ம் ஆண்டில் மட்டும் சுவிஸ் நிறுவனங்கள் 72 நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்ததன் மூலம் சுமார் 563.5 மில்லியன் பிராங்குகள் லாபம் பார்த்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இது கடந்த 2013ம் ஆண்டு ஆயுத ஏற்றுமதி விகிதத்தை விட, 22 சதவிகிதம் அதிகம் என அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மேலும் சுவிட்சர்லாந்திலிருந்து வெளிநாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்வதை நிறுத்த வேண்டும் என ஊர்வலத்தில் கலந்துக்கொண்டவர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
சுவிஸ் புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 2013ம் ஆண்டு மட்டும் சுமார் 21,465 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அவர்களில் 3,167 வெளிநாட்டினருக்கு சுவிஸில் தங்க அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
http://www.coolswiss.com/view.php?22eOld0bcua0Qd4e34MC302cBnB3ddeZBn5302egAA2e4q0asacb3lOK43

No comments:

Post a Comment