Sunday, April 26, 2015

பெண்கள் மேலாடை இல்லாமல் சூரிய குளியல்: அனுமதி கேட்கும் கலிபோர்னியா

கலிபோர்னியாவில் உள்ள ஒரு கடற்கரை நகரம் பெண்கள் அனைவரும் மேலாடை இல்லாமல் சூரிய குளியலில் ஈடுபட அனுமதிக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் வெளியே அமைந்துள்ள வெனிஸ் கடற்கரை நகர கவுன்சிலர்கள் சேர்ந்து இந்த தீர்மானத்தை கொண்டுவந்துள்ளார்கள். ஆனால் இந்த கோரிக்கை பற்றி இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர சபைக்குதான் உள்ளது.
அந்த தீர்மானத்தில் வெனிஸ் கடற்கரையானது இத்தாலி, ஐரோப்பிய கலாச்சாரத்தை அடிப்படையாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்றும், அமெரிக்காவின் பல பகுதிகள் உட்பட உலகின் பல இடங்களில் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் செய்ய அனுமதி உள்ளது. ஆண்களுக்கு சமமாக பெண்களும் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் செய்ய உரிமையுள்ளது. அதை நிலை நாட்டவே இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸில் நகர சபை அந்நகரத்தில் மேலாடை இல்லாமல் சூரிய குளியல் செய்வதற்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment