Tuesday, April 21, 2015

விமான அதிகாரியின் மகள் நொறுக்குத்தீனிக்காக சண்டை போட்ட வழக்கு: 1 வருட சிறை

தென் கொரியாவில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய வழக்குகளில் ஒன்றான, கொரிய விமான அதிகாரியின் மகள் நொறுக்குத்தீனிக்காக சண்டை போட்ட வழக்கில் குற்றவாளியான பெண்ணுக்கு அளிக்கப்பட்டுள்ள 1 வருட சிறை தண்டனையை 3 வருடமாக உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
கொரியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றுபவர் 'சோ யாங் ஹோ’. அவரது மகள் ’சோ ஹியூன் ஹா’ கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி, நியூயார்க்கிலிருந்து சியோல் செல்லும் விமானத்தில் ஹியூன் முதல் வகுப்பில் பயணித்த போது, மகாடேமியா நட்ஸ் எனப்படும் நொறுக்குத் தீனியை அவர் கேட்காத போதும் பணிப்பெண்கள் அவருக்குக் கொடுத்தனர். அதுவும் கிண்ணத்தில் கொடுக்காமல் பிளாஸ்டிக் கவரோடு குடுத்ததே இந்தப் பிரச்சனைக்குக் காரணமாக இருந்தது. சரியான முறையில் உணவு பரிமாறப்படாததால் கோபப்பட்ட ஹியூன் முன் சீட்டில் தலையால் இடித்துக் கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து ஹியூனின் தாயார் "மகளை சரியானபடி வளர்க்காத என் மீதும் குற்றமுள்ளது. தந்தை என்ற முறையிலும் கொரிய விமான நிறுவனத்தின் தலைமை பொறுப்பாளர் என்ற முறையிலும் நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறினார். ஹியூன் நிறுவனத்தின் எல்லா பொறுப்புகளிலிருந்தும் விலக்கப்படுவதாக அவரது தந்தை தெரிவித்தார். இருப்பினும், ஹியூனின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணை நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த பிப்ரவரி மாதம் ஒரு வருட சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில், ஹியூன் மனதார மன்னிப்பு கேட்கவில்லை என்று தற்போது குற்றம் சாட்டியுள்ள வழக்கறிஞர்கள் 1 வருட சிறை தண்டனையை 3 வருடமாக உயர்த்த வேண்டும் என்று நேற்று நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளனர்.

No comments:

Post a Comment