Tuesday, April 21, 2015

15 வயதில் தாக்கிய புற்று நோய்..கைவிட்டு சென்ற உயிர்த் தோழி: விடாமுயற்சியால் அசத்திய அர்னால்ட்! (வீடியோ இணைப்பு)

பஞ்சாபை சேர்ந்த ஆனந்த் அர்னால்ட் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியில் வீழ்த்தப்பட்டாலும் விடாமுயற்சியால் 3 முறை தேசிய ஆணழகனான தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானா நகரை சேர்ந்த பிரின்ஸ் அர்னால்ட் என்பவரது மகனான ஆனந்த அர்னால்ட் (28), 13ம் வயதில் உடற்பயிற்சி மீது ஏற்பட்ட காதலினால் ‘மிஸ்டர் கோல்ட்’ பட்டத்தை வென்றுள்ளார்.
இதை தொடர்ந்து அடுத்தடுத்த பட்டங்களையும் வெல்ல வேண்ட்யும் என்ற முனைப்போடு செயல்பட்டுவந்த ஆனந்துக்கு 15 வயதில் முதுகுப்பகுதியில் பயங்கர வலி ஏற்பட்டுள்ளது.
பின்னர் மருத்துவர்கள் சோதித்து பார்த்தபோது அவருக்கு முதுகெலும்பு பகுதியில் புற்றுநோய் தாக்கியது தெரியவந்துள்ளது.
இதையடுத்து நடந்த அறுவை சிகிச்சைகளின் விளைவாக இடுப்புக்கு கீழே எந்த உடலுறுப்பும் செயல்படாத நிலையில் ஆனந்த் ஒரு சிறிய சக்கர நாற்காலிக்குள் முடங்கியுள்ளார்.
இவ்வாறு ’இடுப்புக்கு கீழே செயலற்றுப் போனவர்’ என்பதை அறிந்த அவரது நெருங்கிய உயிர்த்தோழி ஆனந்தை உதறியுள்ளார்.
ஆனால் தன்னம்பிக்கையை இழக்காத ஆனந்த் அர்னால்ட், சக்கர நாற்காலியில் அமர்ந்தபடியே உடற் பயிற்சிகளை மேற்கொண்டுவந்துள்ளார்.
தனது பெற்றோர் மற்றும் 3 சகோதரிகளும் கொடுத்த ஊக்குவிப்பால் சக்கர நாற்காலி ஆணழகன் போட்டிகளில் மிகக் குறுகிய காலத்தில் 3 முறை தேசிய ஆணழகன் பட்டங்களையும், 12 முறை பஞ்சாப் மாநில ஆணழகன் பட்டத்தையும், மேலும் 27 இதர பட்டங்களையும் வென்றுள்ளார்.
மேலும் தற்போது லூதியானா நகரில் உடற்பயிற்சி மையம் ஒன்றை நடத்தி வரும் ஆனந்த் அர்னால்ட் தனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment