Monday, March 30, 2015

இலவச wi-fi சேவையை ஆரம்பித்து வைத்தார் ரணில்



ஜனாதிபதி தேர்தலின்போது அளித்த வாக்குறுதிக்கு இணங்க இலவச wi-fi சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த wi-fi சேவையை நாடளாவிய ரீதியில் 8 மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட 26 பொது இடங்களில் பெற்றுக்கொள்ள முடியும்.
உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்ட இந்த நிகழ்வின் நேரடி ஒளிபரப்பு, யாழ்ப்பாணம், பொலன்னறுவை மற்றும் மாத்தறை ரயில் நிலையங்களிலும் பஸ் நிலையங்களிலும் பாரிய திரைகளினூடாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.
இதேவேளை, ஒகஸ்ட் நிறைவுக்குள் 1,000 பொது இடங்களில் இச்சேவையை பெற்றுக்கொள்ள முடியுமென தகவல் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப முகவர் நிலையம் அறிவித்துள்ளது.
இந்த wi-fi சேவையை கொழும்பு கோட்டை ரயில் நிலையம், புறக்கோட்டை பொது மற்றும் தனியார் பஸ் நிலையங்கள், கண்டி தலதா மாளிகை, கோட்டை மிதக்கும் சந்தை, கொழும்பு சட்டக்கல்லூரி, கொழும்பு பொது நூலகம், தெஹிவளை மிருகக்காட்சிச் சாலை, கொழும்பு குதிரைப் பந்தயத் திடல், பொலிஸ் தலைமையகம், காலி, யாழ்ப்பாணம் ரயில் நிலையங்கள், கோட்டை டச் வைத்தியசாலை, காலிமுகத்திடல்,
பத்தரமுல்லையிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்,கொழும்பு அருங்காட்சியகம், கராப்பிட்டிய வைத்தியசாலை, இரத்தினபுரி அருங்காட்சியகம், பொலன்னறுவை ஆதார வைத்தியசாலை, மாத்தறை பஸ் நிலையம், பொலன்னறுவை பஸ் நிலையம், மிரிஜ்ஜாவில தாவரவியல் பூங்கா, யாழ்ப்பாணம் பொது நூலகம், கண்டி மற்றும் பேராதனை ரயில் நிலையம் ஆகிய இடங்களில் பெற்றுக் கொள்ள முடியும்.

No comments:

Post a Comment