Wednesday, March 18, 2015

சிங்கப்பூரின் தந்தை இறக்கவில்லை: இணையத்தளத்திற்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு!

சிங்கப்பூர் முன்னாள் பிரதமரும் சிங்கப்பூரின் ஸ்தாபக தந்தையுமான லீ குவான் யூ காலமானதாக செய்தி வெளியிட்ட இணையத்தளத்துக்கு எதிராக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளது.
சிங்கப்பூர் பிரதமரின் சின்னம் பொறிக்கப்பட்ட இணையத்தளம் ஒன்று இன்று லீ குவான் யூ இறந்துவிட்டதாக செய்தியை வெளியிட்டது.
எனினும் பிரதமர் அலுவலகத்தை, சிங்கப்பூரின் ஸ்ரெய்ட் டைம்ஸ் வினவியபோது அவ்வாறான செய்தி எவையும் வெளியிடப்படவில்லை என்பது தெரியவந்தது.
இந்தநிலையில் லீ குவான் கடந்த பெப்ரவரி 5ஆம் திகதியன்று வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதற்கிடையில் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் இறந்துவிட்டதாக சிஎன்என், சீனாவின் சிசிடிவி போன்ற செய்தி நிறுவனங்களும் பிழையான செய்தியை பிரசுரித்தன
இதில் சீன செய்தி நிறுவனம் பின்னர் தமது மன்னிப்பை கோரியது.

No comments:

Post a Comment