Sunday, March 22, 2015

சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ காலமானார்



சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது.
கடந்த பல வாரங்களாக அவர் கடும் நிமோனியா காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
பிரிட்டனிடமிருந்து சிங்கப்பூர் விடுதலை பெறும் வழிமுறையை முன்னின்று நடத்திய லீ க்வான் யூ பின்னர் மலேசியாவிடமிருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கும் நடவடிக்கை எடுத்தார்.
அவர் சிங்கப்பூரின் பிரதமராக இருந்த மூன்று தசாப்தகாலத்தில் , அந்த நாடு, பெரிய இயற்கை வளங்கள் ஏதுமற்ற ஒரு சாதாரண துறைமுகம் என்ற நிலையில் இருந்து பிரகாசிக்கும் வர்த்தக மையமாக உருவான ஒரு அசாதாரண மாற்றத்தை ஏற்படுத்தினார்.
கருத்து மாறுபடுபவர்களை அவர் நீதிமன்றங்களை வைத்து ஒடுக்கியதை அவரை விமர்சிப்பவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். ஆனால் லீ அவர்கள் உள் நாட்டிலும்,வெளி நாடுகளிலும் பலராலும் புகழப்படும் ஒரு தலைவராகவே இருந்திருக்கிறார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் லி குவான் யூ மறைந்தார்
சிங்கப்பூரின் தேசத்தந்தை என்று வர்ணிக்கப்படும் லி குவான் யூ மறைந்ததாக சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் சற்று முன்னர் அறிவித்திருக்கிறது.
அவருக்கு வயது 91.
ஒரு காலத்தில் சின்னஞ்சிறு கடற்கரை நகரமாக பார்க்கப்பட்ட சிங்கப்பூரை, உலகின் முக்கிய செல்வந்த மையமாக மாற்றிக்காட்டியவர் லீ என்று புகழப்படுகிறார். சிங்கப்பூரின் முதல் பிரதமராக பதவியேற்ற லீ 31 ஆண்டுகள் பதவியில் இருந்தார்.
சிங்கப்பூரை செல்வந்த மையமாக மாற்றியதற்காக அவர் பரவலாக பாராட்டப்பட்டாலும் அவரது சர்வாதிகார ஆட்சிமுறை மீது விமர்சனங்களும் வைக்கப்பட்டன.
சிங்கப்பூர் பொதுமருத்துவ மனையில் உள்ளூர் நேரப்படி திங்கட்கிழமை அதிகாலை 3.18 மணிக்கு அவரது உயிர் அமைதியான முறையில் பிரிந்ததாக சிங்கப்பூர் பிதமர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது.
BBC
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1H.html

No comments:

Post a Comment