Saturday, March 28, 2015

ஜேர்மன் விமான விபத்து..துணை விமானியின் வீட்டில் சிக்கிய ஆதாரங்கள்! திடுக்கிடும் தகவல்களுடன் !

ஜேர்மன் விமானம் விபத்தான நாளன்று துணை விமானி மருத்துவ விடுமுறையில் இருந்ததும், அதை அவர் உயர் அதிகாரிகளிடம் மறைத்ததும் தற்போது தெரியவந்துள்ளது.
கடந்த 24ம் திகதி ஜேர்மன்விங்ஸ் என்ற விமானம் பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலையில் விழுந்து விபத்துக்குள்ளானது, இதில் பயணம் செய்த விமான குழு உள்ளிட்ட 150 பயணிகளும் பரிதாபமாக பலியாகினர்.
இரண்டு நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட கருப்பு பெட்டியில், துணை விமானியான Andreas Lubitz என்பவர் வேண்டுமென்றே விமானத்தை விபத்துக்குள்ளாக்கியது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, அவரது வீட்டில் நேற்று அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, துணை விமானி பயன்படுத்திய கணணி மற்றும் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி சோதனை செய்தனர்.
அதில், துணை விமானி கடுமையான மன அழுத்த நோய்க்கு உள்ளாகி இருப்பதும், அதற்கான தொடர் சிகிச்சைகளை எடுத்து வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
ஆவணங்களில் ஒன்றில், அவரது மருத்துவர் துணை விமானிக்கு 24ம் திகதி, அதாவது விமான விபத்து நிகழ்ந்த நாளன்று, மருத்துவ விடுப்பு எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தி இருந்தார்.
ஆனால், மருத்துவர் அளித்திருந்த ஆவணத்தை தன்னுடைய உயர் அதிகாரிகளுக்கும், தன்னுடைய விமானிகளுக்கும் தெரியாமல் மறைத்துள்ளார்.
மேலும், துணை விமானியின் வீட்டை சோதனை செய்ததில், தற்கொலை தொடர்பாக அல்லது விமான விபத்துக்கு பொறுப்பேற்கும் விதத்தில் எந்த கடிதமும் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஒருநாள் இந்த உலகமே என் பெயரை தெரிந்து கொள்ளும்: முன்னாள் காதலியிடம் எச்சரித்த துணை விமானி

No comments:

Post a Comment