Wednesday, March 18, 2015

மனநலம் குன்றிய நபரை சுட்டுக் கொன்ற பொலிசார்: நெஞ்சை உருக்கும் வீடியோ காட்சி

மனநலம் குன்றிய நபர் ஒருவரை அமெரிக்க பொலிசார் இரக்கமின்றி சுட்டு கொன்ற வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள டல்லாஸ்(Dallas) நகரில் Shirley என்ற மூதாட்டி தனது 38 வயதான Jason Harrison என்ற மகனுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
இவர் தனது மனநலம் குன்றிய மகனை பொலிசார் கொன்றுவிட்டதற்கு ஆதரமாக வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார்.
மூளை சம்பந்தப்பட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஹேரிசன், அடிக்கடி தொந்தரவுகள் கொடுத்து வந்துள்ளார், இதனால் Shirley பொலிசாரின் உதவியை நாடுவது வழக்கம்.
இந்நிலையில் 2014ம் ஆண்டு யூன் மாதம் தனது மகன் தொந்தரவு செய்வதாகவும், வீட்டிற்கு வந்து உதவி செய்யுங்கள் என டல்லாஸ் பொலிசாரை Shirley அழைத்துள்ளார்.
அப்போது வீட்டிற்கு வந்த பொலிசாரிடம், “எனது மகனுக்கு மூளை கோளாறு ஏற்பட்டுள்ளது, பார்த்துக் கொள்ளுங்கள்” என கூறியபடி Shirley நடந்து சென்றார்.
தனது தாயின் பின்னால் கையில் Screwdriver வைத்துக்கொண்டு வந்த ஹேரிசனிடம் “அதை கீழே போடு, அதை கீழே போடு” என்று பொலிசார் கூறுகின்றனர்.
இதனை கேட்டதும் பதற்றம் அடைந்த ஹேரிசன் ஒரு அடி முன்னே எடுத்து வைத்த அதே வினாடியில், பொலிசார் இருவர் அவரை சுட்டுக் கொல்கின்றனர்.
இதில் சம்பவ இடத்திலேயே ஹேரிசன் பரிதாபமாக மரணமடைகிறார். இந்த கொடூர சம்பவத்தை சற்றும் எதிர்பார்க்காத அவரது தாயார், ‘எனது மகனை கொன்று விட்டீர்களே…எனது மகனை கொன்று விட்டீர்களே’ என கத்தியவாறு ஓடுகிறார்.
பொலிசார் சட்டையில் பொருத்தியிருந்த கமெராவில் இந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளன.
இச்சம்பவத்திற்கு எதிராக பொலிசார் மீது வழக்கு தொடர்ந்துள்ளதுடன், தற்போது வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Shirley-யின் வழக்கறிஞரான Geoff Henley, மனநலம் குன்றிய நபரிடம் பதற்றம் அளிக்கும் விதத்தில் கத்தியது தவறு என கூறிய அவர், பொலிசாரிடம் கலவரக்காரர்களை கட்டுப்படுத்தும் போலி துப்பாக்கி இருந்தபோது அதை பயன்படுத்தாமல், நிஜ துப்பாக்கியை பயன்படுத்தியது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார்.
பொலிசார் தரப்பு வழக்கறிஞரான Chris Livingston, ஒரு Screwdriver ஆயுதத்தை வைத்து ஒருவரை எளிதில் கொல்ல முடியும் என்பதால், பொலிசாரின் தற்காப்பிற்காக சுட்டுதாக பதிலளித்துள்ளார்.
வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்னும் வெளியாகததால், ஹேரிசனை சுட்டுக்கொன்ற இரண்டு காவலர்களும் பணிக்கு திரும்பியுள்ளனர்.

No comments:

Post a Comment