Sunday, March 22, 2015

புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்! பேதமின்றி பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியுள்ளது: ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு



பேதமின்றி பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் ராஜாங்க அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிகழ்வில் பங்கேற் போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற ஆளும் எதிர்க்கட்சி என்ற பேதம் பாராட்டாது பணியாற்ற சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
19ம் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றிற்கு கொண்டு வரவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையில் திருத்தங்களை செய்யவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பங்குதாராக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
நாட்டின் பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினரும் இணைந்து தீர்வு வழங்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
அந்த எதிர்ப்பை பூர்த்தி செய்ய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்த புதிய அமைச்சர்களின் பெயர் விபரங்கள்!
இலங்கையில் புதிய அமைச்சரவை உறுப்பினர்களின் பதவிப் பிரமாணம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மைத்திரி- ரணில் தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரும் இன்று இணைந்து கொண்டனர்.
இதன்படி 11 புதிய அமைச்சரவை பொறுப்பு அமைச்சுக்களும், 5 இராஜாங்க அமைச்சுப் பொறுப்புக்களும், 10 பிரதியமைச்சு பொறுப்புக்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான சத்தியப் பிரமாண நிகழ்வு சற்று முன்னர் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
அமைச்சர்கள்
ஏ.எச.எம்.பௌசி - அனர்த்த முகாமைத்துவ அமைச்சர்
எஸ்.பி.நாவின்ன - தொழில் அமைச்சர்
எஸ்.பி.திஸாநாயக்க - கிராமிய விவகார அமைச்சர்
ஜனக பண்டார தென்னக்கோன் - உள்ளூராட்சி மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர்
பிலிக்ஸ் பெரேரா – விசேட திட்டமிடல் அமைச்சர்
மகிந்த யாப்பா அபேகுணவர்தன – பாராளுமன்ற விவகார அமைச்சர்
ரெஜினோல்ட் குரே – விமான சேவை அமைச்சர்
விஜித் விஜயமுனி சொய்சா - நீர்ப்பாசன அமைச்சர்
மகிந்த அமரவீர – மீன்பிடிதுறை அமைச்சர்
சரத் அமுனுகம - உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைச்சர்
பியசேன கமகே - தொழிற் பயிற்சி திறன் விருத்தி அமைச்சர்
பிரதியமைச்சர்கள்
திஸ்ஸ கரலியத்த- புத்தசாசனம் பிரதியமைச்சர்
தயாசிரித்த திசேரா - மீன்பிடி பிரதியமைச்சர்
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய - உள்நாட்டு பிரதியமைச்சர்
லச்மன் செனவிரட்ன- இடர்முகாமைத்துவ பிரதியமைச்சர்
லக்ஷ்மன் யாப்பா - விமான பிரதியமைச்சர்
லலித் திஸாநாயக்க- நீர்ப்பாசனம் பிரதியமைச்சர்
ஜெகத் புஸ்பகுமார - பெருந்தோட்டத்துறை பிரதியமைச்சர்
லசந்த அழகியவன்ன - கிராமிய அபிவிருத்தி பிரதியமைச்சர்
சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே- உயர்கல்வி பிரதியமைச்சர்
சாந்த பண்டார - ஊடகம் பிரதியமைச்சர்
இராஜாங்க அமைச்சர்கள்
பவித்ரா வன்னியாராச்சி- சுற்றுச்சூழல்
ஜீவன் குமாரதுங்க- தொழிலாளர் விவகார
மஹிந்த சமரசிங்க-நிதி
சீ.பீ. ரத்நாயக்க- அரச நிர்வாகம் மற்றும் ஜனநாயகக் கட்டுப்பாட்டு
டிலான் பெரேரா- வீடு மற்றும் சமூர்த்தி விவகாரம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு
19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தொடர்பான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நிலைப்பாட்டால், அந்த கட்சிக்குள் பிளவு ஏற்படும் ஆபத்து உருவாகியுள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் சர்வாதிகாரங்களை நீக்குவது தொடர்பான 19வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எடுத்துள்ள தீர்மானத்தினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.
19வது திருத்தச் சட்டத்துடன் தேர்தல் சீர்த்திருத்த சட்டத்தையும் கொண்டு வர வேண்டும் என்று குறிப்பாக நிமால் சிறிபால டி சில்வா தலைமையிலான தரப்பினரே வற்புறுத்தி வருகின்றனர்.
எனினும் அவர்களின் இந்த நிலைப்பாட்டை எதிர்க்கும் 19வது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான குழுவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ளது.
இவர்களில் 10 பேர் நாளைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து அமைச்சர் பதவிகளை பெற்றுக்கொள்ள உள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRWSUls1G.html

No comments:

Post a Comment