Sunday, March 22, 2015

“அமெரிக்க ராணுவ அதிகாரிகளை கொன்று குவியுங்கள்”: உத்தரவிட்ட ஐ.எஸ் அமைப்பு

அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த 100 அதிகாரிகளை கொல்லுமாறு ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு இணையதளத்தில் வெளியிட்டுள்ள உத்தரவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க தலைமையிலான சில நாடுகள் சிரியா மற்றும் ஈராக்கில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் அமெரிக்க ராணுவத்தை சேர்ந்த அதிகாரிகள் பெரும் பங்கு வகிக்கின்றனர்.
இந்நிலையில், தங்கள் மீது தாக்குதல்களை நடத்தி வரும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் 100 பேரை கொல்ல வேண்டும் என ஐ.எஸ் அமைப்பு இணையதளத்தில் நேற்று உத்தரவிட்டது.
100 அமெரிக்க ராணுவ அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் முகவரிகளை வெளியிட்ட ஐ.எஸ் அமைப்பு, இந்த அதிகாரிகளை அமெரிக்காவில் உள்ள தங்களது இயக்கத்தை சேர்ந்தவர்கள் கொல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இணையத்தில் வெளியிட்ட இந்த தகவல்களை அமெரிக்க ராணுவ தலைமை அலுவலகமான பெண்டகன் ரகசியமாக சேகரித்துள்ளது. இது குறித்து பேசிய ராணுவ உயர் அதிகாரி ஒருவர், ஐ.எஸ் அமைப்பு வெளியிட்டுள்ள தகவல்கள் குறித்து தீவிரமான விசாரணையை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ள ராணுவ அதிகாரிகளிடம் தகவல்களை அனுப்பி எச்சரிக்கை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment