Wednesday, March 18, 2015

லண்டனில் ஒரே நடையில் 3 வீடுகளில் கொள்ளை: அரிசி கிண்ணத்தை கூட விடவில்லை என்கிறார்கள் !

பிரித்தானியாவில் உள்ள வட்பேட் என்னும் நகரில் , அடுத்தடுத்து 3 தமிழ் வீடுகளில் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஒரே நாளில் மற்றும் சில மணி நேர வித்தியாசத்தில் இக்கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளமை அப்பகுதில் வாழும் தமிழர்களை கிலிகொள்ள வைத்துள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. குறிப்பாக ஞாயிற்றுக் கிழமைகளில் தமிழர்கள் தமது பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தமிழ் பள்ளிக்கூடம் செல்வது வழக்கமான விடையம். இச்சந்தர்பத்தை பாவித்தே கொள்ளை இடம்பெற்றுள்ளது. சமையல் அறை முதல் படுக்கை அறைவரை சோதனை நடத்தி , நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்கள் கள்வர்கள்.
அரிசி , பருப்பு என்று அனைத்துப் பாத்திரங்களையும் போத்தல்களையும் நிலத்தில் கொட்டி அதில் நகைகள் ஒளித்துவைக்கப்பட்டுள்ளதா என்று தேடியுள்ளார்கள். நகைகள் களவுபோனது ஒருபுறம் இருக்க , வீட்டை சுத்தம்செய்யவே 2 நாட்கள் பிடிக்கும் என்று தமிழர்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள். நன்றாக விடையம் தெரிந்த அல்லது அறிந்துகொண்டு தான் இப்படியான செயல்களை கள்வர்கள் செய்வதாகவும். சிலவேளை இவர்கள் வேறு நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது. ஆனால் வேற்று நாட்டுக் கள்வர்களாக இருந்தாலும் சில தமிழ் இளைஞர்களே இவர்களுக்கு தகவல்களை வழங்கிவருவதாகவும் கூறப்படுகிறது.
வெறும் 99 பவுன்களுக்கு நல்ல எலாம் ஒன்றை B&Q வில் வாங்கி நீங்களே வீட்டில் பொருத்தலாம். ஆனால் அதனை பெரும்பாலான தமிழர்கள் செய்வதே இல்லை. பின்னர் களவு ஒன்று நடந்துவிட்டால் , பல்லாயிரக்கணக்கான பவுன்சுகள் பெறுமதிமிக்க நகைகளை பறிகொடுத்து நிற்கிறார்கள். இதனை விட 99 பவுன்சுக்கு ஒரு எலாமை வாங்கிப் பொருத்தலாமே ?

No comments:

Post a Comment