Tuesday, March 24, 2015

1 மணி 44 நிமிடங்கள் இதயத் துடிப்பு நின்று மீண்டும் உயிர் வந்த சிறுவன் இவன் தான் பாருங்கள் !

பென்சில்வேனியா: பென்சில்வேனியாவில் உள்ள மிப்லின்பர்க்கில் வசித்து வரும் ரோஸ் மார்ட்டின் என்ற பெண்மணியின் 2 வயது மகன் கார்டெல் மார்ட்டின் கடந்த மார்ச் 11ம்தேதி, தன் சகோதரருடன் வெளியே விளையாட சென்ற போது அவர்களது வீட்டின் தோட்டத்தின் வழியாக செல்லும் ஓடையில் எதிர்பாராத விதமாக சிறுவன் விழுந்துவிட்டான். அந்த ஓடையோ கடும் பனிப்பொழிவு காரணமாக உறைந்திருந்தது. விளையாட சென்ற குழந்தை கார்டெல் வீட்டுக்கு திரும்பாததைக் கண்டு அதிர்ச்சியடைந்த தாய் ரோஸ் அவசர சேவை மையத்துக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து ரோஸ் மற்றும் பலரும் குழந்தையை தேடினர். அப்போது ரோஸின் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் குழந்தை கார்டெல் ஓடை பக்கத்தில் உள்ள மரத்தடியில் கிடந்ததை கண்டார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவசர சேவை மையத்தினர், கார்டெல்லை மீட்டு சோதித்து பார்த்தபோது, இதயத்துடிப்பு நின்றும், மூச்சு விடாத நிலையிலும் குழந்தை இருப்பதை கண்டனர். உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் டான்வில்லியில் உள்ள மருத்துவ மையத்திற்கு குழந்தை கார்டெல்லை கொண்டு சென்றனர்.
அங்கு கார்டெல்லை பரிசோதித்த பின் அவனுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு, செயற்கை முறையில் இதயத்திலிருந்து ரத்தத்தை பம்பிங் செய்து திசுக்களை மரணமடைய செய்யாமல் இருக்க வைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சுமார் 1 மணி 41 நிமிடங்கள் போராடிய மருத்துவர்கள் அவனது உடலின் வெப்பம் சீராகி 28 டிகிரியை தொடும்போது இதயம் துடிப்பதை கண்டனர். தொடர்ந்து மேற்கொண்ட சிகிச்சையில் கார்டெல்லுக்கு சுயநினைவும் திரும்பியது.
அவனது மூளையும், இதயமும் செயலிழந்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதை உணர்த்தியது. கடும் போராட்டத்திற்கு பின் மகனுக்கு சுயநினைவு திரும்பிய மகிழ்ச்சியில் பேசிய தாய் ரோஸ் கூறுகையில், 'இது கடவுளின் செயல்' என்று கூறினார்.

No comments:

Post a Comment