Thursday, February 5, 2015

“SELFIE” யே விமான விபத்துக்கு காரணம்: விசாரணையில் தகவல்

அமெரிக்காவில் விமானம் பறந்து கொண்டிருந்த போது, விமானி செல்பி எடுக்க முயற்சித்ததே விபத்திற்கு காரணம் என தெரியவந்துள்ளது. செல்போன் மூலம் தங்களை தாங்களே படமெடுத்துக் கொள்ளும் செல்பி மோகம் அதிகரித்துள்ளது, இதனால் பல்வேறு விபரீதங்களும் நடந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த விமான விபத்திற்கு, விமானி செல்பி எடுக்க முயற்சித்ததே காரணம் என தெரியவந்துள்ளது. ‘செஸ்னா 150 கே’ எனப்படும் சிறிய ரக விமானம் ஒன்று கடந்த மே மாதம் 31ம் திகதி கொலராடோ பகுதியில் பறந்து கொண்டிருந்தது. விமானியும், ஒரு பயணியும் இருந்த அந்த விமானம் வாட்கின்ஸ் அருகே திடீரென விழுந்து நொறுங்கியது, இந்த விபத்தில் விமானத்தில் இருந்த இருவரும் உயிரிழந்தனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தியது.
அதில், விமானம் குறைந்த உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது விமானி செல்பி எடுத்துக் கொண்டதும், இதனால் அவரது கவனம் சிதறி விபத்து ஏற்பட்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment