Tuesday, February 10, 2015

பிரான்சின் Marseille நகரில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் !

பிரித்தானிய HSBC வங்கியின் திருகுதாளம்: கஸ்டமர் வரி ஏய்ப்புக்கு உதவியதா ?

[ Feb 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 475 ]
பிரித்தானியாவின் முன்னணி வங்கியான HSBC தனது செல்வந்த வாடிக்கையாளர்கள் பிரித்தானிய அரசாங்கத்திற்கு பல மில்லியன் பவுண்ட்ஸ் வரியைச் செலுத்தாமல் ஏமாற்றுவதற்கு உதவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சுவிட்சர்லாந்திலுள்ள HSBC வங்கியின் கணக்குகள் தொடர்பில் 2007 ஆம் ஆண்டு தகவல்கள் கசிந்தன.
இதன் போது வாடிக்கையாளர்கள் வரியைத் தவிர்ப்பதற்கும், வரி மோசடியில் ஈடுபடுபவர்கள் சட்டத்தில் இருந்து தப்பிப்பதற்கும் வங்கி உதவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில், வங்கியின் ரகசியத்தன்மையைப் பயன்படுத்தி பிரகடனப்படுத்தாத வங்கிக் கணக்குகளின் மூலம் சிலர் நன்மைகளைப் பெற்றுள்ளதாக எச்.எஸ்.பி.சி ஏற்றுக்கொண்டுள்ளது. எனினும், தற்போது அந்த நிலைமை முற்றிலுமாக மாற்றப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
கடந்த 2007 ஆம் ஆண்டு ஜெனிவாவிலுள்ள எச்.எஸ்.பி.சி வங்கியில் பணியாற்றிய கணனி நிபுணர் ஒருவரினால் திருடப்பட்ட ஆவணங்களில், உலகம் முழுவதுமுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களின் தகவல்கள் காணப்பட்டன.
வெளிநாட்டுக் கணக்குகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது அல்ல என்ற போதும், வரிகளைக் குறைக்கும் நோக்கில் அதனைப் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும், வரித்தவிர்ப்பு என்பது சட்டத்திற்கு உட்பட்டது என்பதுடன், வேண்டுமென்றே வரி செலுத்துவதை தவிர்க்கும் வகையில் பணத்தினை மறைப்பது சட்டவிரோதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.athirvu.com/newsdetail/2237.html


பிரான்சின் Marseille நகரில் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் !

[ Feb 10, 2015 12:00:00 AM | வாசித்தோர் : 285 ]
பிரான்சின் Marseille நகரில் ஆயுததாரி ஒருவர் பிரான்ஸ் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார். ஏ.கே ரக துப்பாக்கியை வைத்திருந்த ஆயுததாரி தனது தலைப்பகுதியை மறைத்திருந்ததாகவும் கூறப்படுகின்றது. இன்று திங்கட்கிழமை காலைவேளையில் துறைமுகப்பகுதி நகரான Marseille இல் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் குறித்த பகுதிக்கு மேலதிக துருப்பினர் விரைந்துள்ளனர். அதேவளை பிரெஞ்ச் பிரதமர் மனுவேல் வோல்ஸ் அங்கு விஜயம் செய்துள்ளதாக பொலிஸ் தரப்புச் செய்திகள் கூறுகின்றன.
http://www.athirvu.com/newsdetail/2236.html

No comments:

Post a Comment