Friday, February 20, 2015

"I am Sorry mom" என்னும் SMS: பிரித்தானிய வெள்ளைக்காரர் ISIS தீவிரவாதிகளோடு !

லண்டன் ரியூப் ஸ்டேஷனில் கெட்டவார்த்தையால் திட்டிய நபருக்கு எப்படி வேலை போனது ?

[ Feb 20, 2015 05:34:53 PM | வாசித்தோர் : 12140 ]

லண்டனில் உள்ள ரியூப்(ரயில்) நிலையத்தில் , ரயிலை விட்டு மட் பக்லான் என்னும் நபர் இறங்கியுள்ளார். இதேவேளை அவர் அருகே நின்ற நபர் மீது மட் பக்லான் லேசாக உரசி விட்ட காரணத்தால் அன் நபர் மட் பக்லானை மிகவும் கெட்ட வார்த்தையால் திட்டி தீர்த்துள்ளார். இந்த மட் பக்லான் யார் என்று கேட்டால் தலை சுற்றும். ஏன் என்றால் இவர் லண்டனில் உள்ள மிகப்பெரிய கம்பெனி ஒன்றில் ஆட்களை வேலைக்குச் சேர்க்கும் தலைமைப் பதவியில் இருக்கிறார். அன்றைய தினம் வழமைபோல பலர் வேலைக்கு சேர இன்ரர் வியூக்காக இவரிடம் வந்துள்ளார்கள்.
என்ன ஆச்சரியம் , காலையில் ரயில் நிலையத்தில் தன்னை கெட்ட வார்த்தையால் திட்டிய நபரும் வேலைதேடி வந்திருந்தார். ஆனால் கெட்ட வார்த்தையால் திட்டிய நபர் மட் பக்லானை அடையாளம் காணவில்லை. இருப்பினும் மட்டுக்கு தன்னை திட்டிய நபரை நன்றாக அடையாள் தெரிந்திருந்தது. அவர் கேட்ட சில கேள்விகளை வைத்தே , கெட்டவார்த்தையால் திட்டிய நபருக்கு தான் காலையில் திட்டிய இவரை தான் என்று புரிந்துவிட்டதாம். அப்படியான கேள்விகளை கேட்டுள்ளார் மட். இறுதியாக அவருக்கு வேலை கிடைக்கவில்லை. இருப்பினும் தான் குறித்த நபரிடம் மனிதாபிமான அடிப்படையில் நடந்துகொண்டதாகவும்.
காலையில் நடந்த சம்பவத்திற்கு பழிவாங்கவில்லை என்றும் மட் கூறியுள்ளார். ஆனால் நாம் சிலவேளை ஒருவரை பார்த்து குறைத்து மதிப்பிடுவது. அல்லது தோற்றத்தைப் பார்த்து மதிப்பிடுவது என்பது எம்மை பெரும் பாதாளத்தினுள் தள்ளும் என்பதற்கு இதுவே நல்ல உதாரணம் ஆகும்.



சீனாவின் செயற்கை தீவு: உலக நாடுகளின் தமது கவனத்தை திருப்பியுள்ளது !

[ Feb 20, 2015 05:48:00 PM | வாசித்தோர் : 12975 ]

சீனாவின் தென்பகுதில் உள்ள கடல் எல்லை தொடர்பாக நீண்ட நாட்களாக முரன்பாடு இருந்து வருகிறது. சீனா தனது நிலப்பரப்பை விஸ்தரித்து வருகிறது. இந்தியா , பர்மா போன்ற நாடுகளின் எல்லைகளுக்கு உள்ளே வந்து பல நூறு கிலோமீட்டர்களை விஸ்தரித்து வருகிறது. இதுபோக தற்போது அன் நாடு தனது , கடல் எல்லையையும் விஸ்தரித்து வருகிறது. இதனால் உலக நாடுகள் பல அதிர்சியடைந்துள்ளது. குறிப்பாக தென் சீனாவில் உள்ள கடல் பகுதியில், கிட்டத்தட்ட சர்வதேச கடல் பகுதியில் அன் நாடு ஒரு பாரிய செயற்கை தீவை கட்டி வருகிறது. குறித்த தீவு சிறிய ரகமாக இருக்கலாம் என்று கருதி அமெரிக்கா போன்ற நாடுகள் அதனை முதலில் கண்டுகொள்ளவில்லை.
ஆனால் ஓசைபடாமல் சீனா பாரிய தீவு ஒன்றை அங்கே கட்டி வருகிறது. சமீபத்தில் அமெரிக்காவின் உளவுபார்க்கும் சட்டலை ஒன்று எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சீனா கட்டி வரும் செயற்கை தீவு மிகவும் தெளிவாக புகைப்படம் பிடிக்கப்பட்டுள்ளது. அந்த தீவு எண்ணை மற்றும் இயற்கை எரிவாயு நிறைந்த கடல் பகுதி மீது கட்டப்பட்டு வருகிறது. அங்கே ராணுவத்தினரை அமர்த்த சீனா திட்டமிட்டுள்ளது. இனி வரும் காலங்களில் எண்ணையை அது தோண்டி எடுக்கும். மேலும் இயற்கை எரிவாயுவையும் அது தோண்டி எடுத்து விற்பனை செய்யும் என்று கூறப்படுகிறது. இப்படியே கடல் மற்றும் நிலப்பரப்புகளை சீனா பிடித்து வருவது , அண்டைய நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
 http://www.athirvu.com/newsdetail/2348.html


25,000 ஆயிரம் படைகளை திரட்டும் அமெரிக்கா: மொசூல் நகர் மீது பாரிய தாக்குதல் நடத்த திட்டம் !

[ Feb 20, 2015 06:19:48 PM | வாசித்தோர் : 14240 ]

ஈராக் எல்லைப்புற நகராக மொசூலை , ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றி தமது பிடியில் வைத்துள்ளார்கள். இன் நகரை மீட்க்க சுமாட் 25,000 ஆயிரம் ஈராக்கிய படைகளை ஒன்று திரட்டியுள்ளது அமெரிக்கா. தற்போது அவர்களுக்கு விசேட பயிற்சிகளை அது வழங்கிவருகிறது. அதி நவீன ஆயுதங்களை கொடுத்து பாரிய போர் ஒன்றை தொடுக்க அமெரிக்கா திட்டம் தீட்டி வருகின்ற செய்தி தற்போது கசிந்துள்ளது. இதனை மொசூல் நகரில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளும் எதிர்பார்த்து நிற்பதாக கூறப்படுகிறது. இதற்கு ஜோர்டான் , சவுதி அரேபியா , சிரியா போன்ற நாடுகளும் உதவவுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டவர்களை பிடித்துச் சென்று அவர்களின் தலைகளை வெட்டியும், சிலரை உயிரோடு எரித்தும் கொலை செய்து வருகிறது ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு. இக்கொலைகள் மொசூல் நகரில் வைத்து தான் நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. மொசூல் நகரே ஐ.எஸ் தீவிரவாதிகளின் கோட்டை என்று கூறப்படுகிறது. எனவே அதனை தகர்த்து எறிந்தால் , ஐ.எஸ் தீவிரவாதிகளின் பலம் பன்மடங்காக குறையும் என்று அமெரிக்கா எதிர்பார்கிறது. அமெரிக்கா இப்படி ஒரு தாக்குதலுக்கு தயார் ஆவதை ஐ.எஸ் தீவிரவாதிகள் ஒன்றும் அறியாமல் இல்லை. அவர்களுக்கும் இது வாழ்வா இல்லை சாவா என்ற போராட்டம் தான்.
 http://www.athirvu.com/newsdetail/2349.html


"I am Sorry mom" என்னும் SMS: பிரித்தானிய வெள்ளைக்காரர் ISIS தீவிரவாதிகளோடு !

[ Feb 20, 2015 06:33:12 PM | வாசித்தோர் : 18290 ]

இதுவரை காலமும் பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்கள் தான் , சிரியா சென்று ஐ.எஸ் தீவிரவாதிகளோடு இணைந்து வந்தார்கள். இவ்வாறு வெளிநாட்டில் பிறந்தவர்கள் பற்றும் பிரித்தானிய பாஸ்போட்டை வைத்திருக்கும் நபர்கள் இவ்வாறு சென்று முஸ்லீம் தீவிரவாதிகளோடு இணைவது குறித்து பிரித்தானிய அரசாங்கம் பெரும் கவலையில் இருந்தது. ஆனால் மேலும் பலத்த அடி , அன் நாட்டு அரசுக்கு காத்திருந்துள்ளது. தற்போது வரலாற்றில் முதல் தடவையாக பிரித்தானிய ராணுவத்தை சேர்ந்த அதுவும் வெள்ளை இனத்தவர் ஒருவர் ஐ.எஸ் இயக்கத்தில் சேர்ந்துள்ளார். 19 வயதாகும் இந்த பிரித்தானிய இளைஞன் 18 வயதில் ராணுவத்தில் தன்னை இணைத்துள்ளார்.
அம்மா என்னை மன்னித்துவிடுங்கள் என்று மோபைல் போனுக்கு ஒரு ரெக்ஸை இவர் போட்டுள்ளார். தற்போது விடுமுறையில் நாடு திரும்பிக்கொண்டு இருக்கும்போது அவர் டுபாயில் இருந்து பிறிதொரு விமானத்தை பிடித்து ஐ.எஸ் தீவிரவாதிகள் உள்ள சிரியாவுக்கு சென்றுவிட்டார் என்று பிரித்தானிய படையினர் கூறியுள்ளார்கள். இது பிரித்தானிய ராணுவத்திற்கு விழுந்த முதல் அடி ஆகும். இதனை முன் உதாரணமாகக் கொண்டு இன்னும் எத்தனை பேர் இவ்வாறு தாவுவார்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் இவ்வாறு ஒரு சம்பவம் நடந்துள்ளதை பிரித்தானியா மூடிமறைக்காமல் வெளிப்படையாக தெரிவித்துள்ளது பெரும் அதிர்வலைகளை தோற்றுவித்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக குறித்த இளைஞரது பெயரை , பிரித்தானிய ராணுவம் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
 http://www.athirvu.com/newsdetail/2350.html

No comments:

Post a Comment