Saturday, February 21, 2015

மனைவியின் கழுத்தை நெறித்து கொன்று நாடகமாடிய கணவன்: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

சுவிட்சர்லாந்தில் மனைவியின் கழுத்தை நெறித்து கொன்றுவிட்டு நாடகமாடிய கணவனுக்கு நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
சுவிஸின் Vaud மண்டலத்தில் உள்ள Assens நகரை சேர்ந்த 46 வயதான ஒரு அரசு பொறியாளருக்கும், அவரது மனைவிக்கும் இடையேயான உறவில் பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.
கடந்த 2012-ல் நடந்த இந்த சம்பவத்தின் போது, அந்த நபர் இரவில் நண்பர்களுடன் வேறொரு நண்பர் வீட்டில் தங்கியுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பிறகு அங்கிருந்து கிளம்பிய அவர் தனது வீட்டிற்கு வந்து, அங்கே படுக்கையில் தூங்கிக்கொண்டு இருந்த தனது மனைவியை கழுத்தை நெறித்து கொன்றுள்ளார்.
இதையடுத்து அவரது ச‌டலத்தை அருகிலிருந்த காட்டில் புதைத்துவிட்டு வீடு திரும்பிய அவர், தனது வீட்டை கொள்ளையர்கள் கொள்ளையடித்தது போல் ஒரு தோற்றத்தை ஏற்படுத்தியதோடு, தனது 3 மாத குழந்தையை தனியாக விட்டுவிட்டு மீண்டும் நண்பர்களின் வீட்டிற்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு நாடகாமாடிய அவரை பொலிசார் கைது செய்தனர். கடந்த 2012ம் ஆண்டு சுவிஸில் உள்ள Yverdon-les-Bains நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு வந்தது.
கடந்த வெள்ளிக்கிழமை அன்று நீதிமன்றத்தில் நடந்த‌ வழக்கு விசாரணையில், தன்னை விட்டு தனது மனைவி விலகி செல்வதாக மிரட்டியதால் தான், அவரை கொலை செய்ததாக குற்றம்சாட்டபட்டவர் ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பான இறுதி வாதத்தில் பேசிய Donovan Tesaury என்ற வழக்கறிஞர், குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர் தனது மனைவியை கொல்ல ஏற்கனவே முடிவு செய்து, அதற்கான திட்டங்களை வகுத்ததாக குறிப்பிட்டார்.
மேலும், தனது மனைவி தன்னை விட்டு விலகி சென்று விட்டால், ஆடம்பரமான வீட்டையும், சொகுசான வாழ்க்கையையும் இழந்து விடுவோமா என்ற அச்சத்தில் தான் இந்த கொலையை செய்ததாக Donovan Tesaury வாதிட்டார்.
குற்றம்சாட்டப்பட்ட நபரின் வழக்கறிஞரான Manuela Ryter Godel வாதிடுகையில், இது திட்டமிட்டு செய்யப்பட்ட கொலை இல்லை என்றும், மனைவியை பிரிந்து விடுவோமா என்ற விரக்தியில் தான் என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் உணர்ச்சி வசப்பட்டு கொலையை செய்தார் எனவும் வாதிட்டார்.
மேலும், குறைந்த பட்ச தண்டனையாக 10 வருடங்கள் சிறை வாசம் அளிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.
இந்நிலையில், இவரது வாதத்தை நிராகரித்த நீதிபதி, மனைவியை திட்டமிட்டு கொன்ற குற்றத்திற்காகவும், தனது 3 மாத குழந்தையை சில மணி நேரங்கள் தனியாக விட்டு சென்ற குற்றத்திற்காகவும், 14 வருடங்கள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment