Saturday, February 7, 2015

லிவர்-பூலில் ஏதோ போலந்து காரனை வைத்து கடையின் பெயர் பலகையை எழுதிவிட்டார் என்று !


நீங்கள் மேலே பார்கும் கடைக்கு சொந்தக்காரி நிஷா நடராஜா. இவர் பிரித்தானியாவின் வெளி மாநிலமான லிவர்-பூலில்(Liverpool) கடை ஒன்றை வைத்திருக்கிறார். இக் கடையின் பெயர்பலகையை பார்த்த ஆயிரக்கணக்கானவர்கள் , நினைத்துக்கொண்டது எல்லாம் ஒரு விடையத்தை தான். அதாவது லிவர்-பூல்(Liverpool) என்னும் பெயரை இவர்கள் தவறுதலாக "லிபூ-பூல்" (Liuerpul ) என்று எழுதிவிட்டார்கள் என்று தான். தற்போது தான் பிரித்தானியாவில் நிறைய போலந்து காரர்கள் இருக்கிறார்களே. அவர்களை வைத்து தான் கட்டட வேலைகள் நடைபெறுகிறது. அவர்களில் யாரோ ஆங்கிலம் தெரியாமல் இப்படி எழுதிவிட்டார்கள் என்று பலர் அதனை பார்த்து கேலிசெய்து , சிரிப்பதும் உண்டு. ஆனால் அவர்கள் அனைவரும் ஒரு வகையில் முட்டாள்களே.
காரணம் என்னவென்றால் தற்போது நாம் லிவர்-பூல் என்று அழைக்கும் பகுதி 1190 ம் ஆண்டில் லிபு-பூல் என்று தான் அழைக்கப்பட்டுள்ளது. அதாவது தண்ணீர் மற்றும் சேறு சகதி நிறைந்த இடம் என்று கிரேக்கத்தில் பொருள்படும். பின்னர் 1346ம் ஆண்டு லையர்-பூல் என்று அது மாற்றம் அடைந்து , 1514ம் ஆண்டு "லீத்த- பூல்" என்று மாறி அப்படியே படிப்படியாக அழைக்கும் பெயர் மாறி இறுதியாக 1752ம் ஆண்டு லிவர்-பூல் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் நன்றாக தெரிந்து வைத்திருக்கும் ஈழத்து தமிழ் பெண்ணான நிஷா நடராஜ், தனது கடைக்கு அந்த பழமையான பெயரை சூட்டியுள்ளார். இப்ப சொல்லுங்கள் யார் முட்டாள் என்று ? ஆங்கிலம் தெரிந்தவர்களா ? இல்லை எமது இனத்தவர்களா ?
தமிழில் ஒரு பழமொழி கூறுவார்கள். "அரசனுக்கு அவன் சொந்த நாட்டில் தான் மதிப்பு" ஆனால் படித்தவனுக்கு சென்ற இடம் எல்லாம் மதிப்பு என்பார்கள்.
அதிர்விற்காக,
வல்லிபுரத்தான்.

No comments:

Post a Comment