Friday, February 6, 2015

அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்!

ஜோர்தான் விமானி உயிருடன் எரித்துக் கொலை

0
ஐ.எஸ் தீவிரவாதிகளால் பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த ஜோர்தான் விமானி உயிருடன் எரிக்கப்பட்டது போன்ற காணொளி ஒன்று நேற்று செவ்வாய்க்கிழமை இரவு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காணொளியில், ஜோர்தான் விமானி முயாத் அல் கசாஸ்பே கூண்டொன்றில் அடைக்கப்பட்டு எரியூட்டப்படுவது போன்ற காட்சி பதிவாகியுள்ளதால் இதனைப்பார்த்தவர்கள் பலத்த அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.
சிரியாவில் நிலைகொண்டிருந்த ஐ.எஸ் தீவிரவாதிகளை குறி வைத்து அமெரிக்க கூட்டுப்படையின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட விமான தாக்குதலில் முயாத் அல் கசாஸ்பே விமானியாக செயற்பட்டிருந்தார். இதன்போது எதிர்பாராத விதமாக குறித்த போர் விமானம் விபத்துக்கு உள்ளாகியிருந்த வேளை விபத்திலிருந்து உயிர் பிழைத்த யோர்தான் விமானியை ஐ.எஸ் தீவிரவாதிகள் பணயக்கைதியாக பிடித்திருந்தனர்.
இந்நிலையில் விமானியை விடுவிக்க வேண்டுமாயின் ஜோர்தான் அரசால் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள ஈராக்கைச் சேர்ந்த சஜிதா அல்- ரிஷாவி யை விடுதலை செய்ய வேண்டும் என ஐ.எஸ் தீவிரவாதிகள் நிபந்தனை விதித்திருந்தனர். இருப்பினும் தமது நாட்டுப் பிரஜையை உயிருடன் இருப்பதை உறுதிப்படுத்தினால் மட்டுமே மரண தண்டனைக் கைதியை விடுவிக்க முடியும் என்று ஜோர்தான் அரசு பதில் அறிவித்தல் விடுத்திருந்தது.
இதற்கிடையில் ஐ.எஸ் தீவிரவாதிகளால் ஏற்கனவே பணயக்கைதியாக பிடிக்கப்பட்டிருந்த ஜப்பானிய ஊடகவியலாளரான கெஞ்சி கோடோவை தலை துண்டித்து கொலை செய்திருந்தனர். ஆயினும் யோர்தான் விமானி குறித்த தகவல் எதுவும் ஐ.எஸ் தீவிரவாதிகளால் வெளியிடப்பட்டிருக்கவில்லை.| இந்நிலையில் யோர்தான் விமானியை உயிருடன் கூண்டொன்றுக்குள் அடைத்து வைத்து பெற்றோல் ஊற்றி எரிப்பது போன்ற கொடூரமான காணொளியொன்றை நேற்று இரவு ஐ.எஸ் தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.canadamirror.com/canada/37608.html#sthash.KmPNgMZh.dpuf


சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு ஜெனிவாவில் கோரவுள்ளது அமெரிக்கா

0
தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைப் பிற்போடுமாறு, ஐ,நா மனித உரிமைகள் பேரவையிடம், அமெரிக்கா கோரக் கூடும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் விடயமறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டியே, இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசியல் நிலைமைகளைக் கருத்தில் கொண்டு, வரும் மார்ச் மாத அமர்வில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தை விவாதத்துக்கு எடுத்துக் கொள்வதை பிற்போடும் படி, ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக் கூடும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய பேச்சுக்களின் போது, தெற்கு மற்றும் மத்திய ஆசியப் பிராந்தியத்துக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால், இதனை மேலோட்டமாக சுட்டிக்காட்டியதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெளியேற்றப்பட்டது குறித்து அமெரிக்கா மகிழ்ச்சி கொண்டுள்ளது.
மைத்திரிபால சிறிசென- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் காலத்தில், அமெரிக்க- சிறிலங்கா உறவுகளுக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக அமெரிக்கா கருதுகிறது.
எனவே, ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்காவுக்கு எதிரான கடுமையான தீர்மானத்தை முன்வைத்து, குழப்பத்தை ஏற்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை.
போர்க்குற்றங்களுக்கு எதிரான வலுவான தீர்மானத்தை முன்வைப்பது, தமிழர்களுக்கு இடமளிக்க எதிர்ப்புத் தெரிவித்து வரும் தேசியவாத சக்திகளை தூண்டிவிட்டு விடும் என்றும், அதன் விளைவாக ,வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மகிந்த ராஜபக்ச மீண்டும் அதிகாரத்துக்கு வரக் கூடும் என்றும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் நிஷா பிஸ்வால் எச்சரித்ததாகவும் தெரியவருகிறது.
நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னதாக, 100 நாள் செயற்திட்டத்தில் ஏராளமான விடயங்களை நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டைக் கொண்டுள்ளது.
இந்தக் கட்டத்தில், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கடுமையான தீர்மானத்தைக் கொண்டு வருவது, 100 நாள் செயற்திட்டத்தில் இருந்து அரசாங்கத்தின் கவனத்தை திசை திருப்பி விடும் என்றும் நிஷா பிஸ்வால் கூறியிருக்கிறார்.
எனினும், தமிழர் பிரச்சினையை மூடி மறைப்பதற்குத் தாம் அனுமதிக்க முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் நிஷா பிஸ்வாலிடம் உறுதியாக எடுத்துக் கூறியுள்ளனர்.
கொழும்புக்கும் வொசிங்டனுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் அதிகரித்து, மற்ற விடயங்கள் முன்னுரிமை பெறும் நிலையில் தமிழர் பிரச்சினை பின் தள்ளப்படும் அச்சம் தோன்றியிருக்கிறது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்ரெம்பர் கூட்டத்தொடரிலேனும், சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் முன்வைக்கப்படுமா என்பதை இப்போது உறுதியாக கூற முடியாது என்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாட்டாளர் ஒருவர் கவலையுடன் தெரிவித்துள்ளார்.
“சிறிலங்கா அரசாங்கம் தனது நலன்களிலேயே கவனம் செலுத்துகிறது. புதுடெல்லியும், வொசிங்டனும் தமது நலன்களிலேயே கவனம் செலுத்துகின்றன.
தமிழர்களைத் தவிர, தமிழர்களின் நலனில் யாருமே அக்கறைப்படவில்லை. இதனை நாம் எங்கு போய்ச் சொல்வது?” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/37611.html#sthash.G4d1DhSK.dpuf


சாதாரண வாழ்க்கை வாழந்த மனிதர் ஒருவர் வியத்தகு நன்கொடையாக 6-மில்லியன் டொலர்களை விட்டுச் சென்ற அதிசயம்.

0
யுஎஸ்.- பிறரெல்பொறொ, வேமொன்ட். சில நேரங்களில் தனது கோர்ட்டின் இரு பக்கங்களையும் ஊசி ஒன்றினால் சேர்த்து குத்திக்கொண்டும்  நீண்ட காலமாக விறகிற்கு அலைந்து திரிபவராகவும் காணப்பட்ட ஒரு மனிதன் பங்குகள் சேமிப்பவராகவும் இருந்துள்ளார். இவரது இந்த செயல் திறன் தனது ஊரின் வாசிகசாலை மற்றும் வைத்தியசாலைக்கு 6-மில்லியன் டொலர்கள் நன்கொடையை உயிலில் எழுதி வைத்திருந்தது இவரது மரணத்திற்கு பின்னர் பகிரங்கமானது.
ஒரு முன்னாள் எரிபொருள் நிலைய ஊழியரும் வாயிற்காவலருமான றோனால்ட் றீட் என்பவரால் இந்த முதலீடு செய்யப்பட்டிருந்தது. தனது 92-வயதில் இவர் மரணமடைந்த போது தெரியவந்துள்ளது.
4.8-மில்லியன் டொலர்கள் பிறரெல்பொறொ ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும், 1.2-மில்லியன் டொலர்கள் நகரின் வாசிகசாலைக்கும் என உயில் எழுதிவைக்கப்பட்டிருந்ததாக இவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
இது மிகவும் ஆச்சரியமான ஒரு செயல் எனவும் அடிப்படை வழக்கத்தில் இவ்வாறு நடப்பது இல்லை எனவும் வழக்கறிஞர் கூறியுள்ளார்.
இது மட்டுமன்றி இவர் வைத்திருந்த பழையான எடிசனின் ஒலிப்பதிவு கருவி ஒன்றையும் இசைப்பதிவு டிரம்சையும் வரலாற்று சங்கம் ஒன்றிற்கு விட்டுச் சென்றுள்ளார்.
- See more at: http://www.canadamirror.com/canada/37617.html#sthash.41PC8YDO.dpuf



அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் சவூதி அரச குடும்பம்: திடுக்கிடும் தகவல்!

0
உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகர இரட்டை கோபுர தாக்குதல் பின்னணியில் சவூதி அரச குடும்பம் இருந்ததாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி இரட்டை கோபுர தாக்குதல் நடந்தது. இத்தாக்குதலில் அல்கொய்தா தீவிரவாதிகள் ஈடுபட்டனர். இத்தாக்குதலில் முக்கிய குற்றவாளியான ஷகாரியாஸ் மொசாய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்தத் தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியவர்களில் இவரும் ஒருவர்.
ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட இவர் தற்போது அமெரிக்காவின் கொலோரபோவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வழக்கு விசாரணையின் போது இவர் நீதி மன்றத்தில் வாக்கு மூலம் அளித்தார்.
அதில் அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்த தாக்குதலுக்கு சவூதி அரேபிய மன்னர் குடும்பத்தின் முக்கிய அதிகாரிகள் குறிப்பிட்ட அளவு நிதி உதவி அளித்தார்கள் என்று தெரிவித்துள்ளார்.
அந்தத் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இதை சவூதி அரேபியா அரசு திட்ட வட்டமாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் சவூதி அரேபிய அரசுக்கோ, அதிகாரிகளுக்கோ, மன்னர் குடும்பத்துக்கோ எந்த வித தொடர்பும் இல்லை. அதற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்று மறுத்துள்ளது.Usa House
- See more at: http://www.canadamirror.com/canada/37640.html#sthash.vrESu5Fn.dpuf

No comments:

Post a Comment