Friday, February 6, 2015

ஜோர்தானிய விமானி விவகாரத்துடன் வெளியே வந்து விட்டது மற்றொரு பெரிய ரகசியம்

இயக்கம் ஜோர்தானிய விமானியை உயிருடன் எரித்துக் கொலை செய்துவிட்டு வீடியோவையும் வெளியிட்ட சம்பவத்தையடுத்து, இந்த விவகாரமே தற்போது ராணுவ வட்டாரங்களில் பரபரப்பாக அடிபடும் பேச்சாக உள்ளது. ராணுவ வட்டாரங்களில் இப்படி பரபரப்பு பேச்சு அடிபட தொடங்கினால், என்னாகும் தெரியுமா? அதுவரை வெளியே தெரியாமல் இருந்த சில ரகசியங்களும் சேர்ந்தே வெளியே வந்துவிடும். இங்கும் அப்படியொரு, ‘இதுவரை வெளியே தெரியாமல் இருந்த’ ரகசியம் வெளிவந்து விட்டது.
அது என்ன?
ஜோர்தானிய விமானம் வீழ்ந்து, விமானி கைப்பற்றப்பட்ட விஷயம் தெரிந்த உடனே மிரண்டு போனது ஐக்கிய அரபு அமிரகம். உடனடியாகவே, ISIS இயக்கம் மீது தாக்குதல் நடத்த தமது விமானங்களை அனுப்புவதை நிறுத்திவிட்டது, ஐக்கிய அரபு அமிரகம். இந்த விஷயம் மீடியாக்களில் வெளியானால் இமேஜ் பாதிக்கும் என்பதால், அப்படியே அமுக்கி விட்டார்கள். இப்போது மற்ற கதை வெளியானதும், இதுவும் கூடவே வந்து விட்டது. சிரியாவிலும், ஈராக்கிலும் ISIS இலக்குகள் மீது விமானக் குண்டுவீச்சுகளை கடந்த செப்டெம்பரில் அமெரிக்கா தொடங்கியபோது, தம்முடன் சில அரபு நாடுகளையும் சேர்த்துக்கொள்ள விரும்பியது. இதற்கு காரணம், அமெரிக்க விமானப்படையால் முடியாததை அரபு நாட்டு விமானப்படைகள் நிகழ்த்திக் காட்டுவார்கள் என்பதற்காக அல்ல - இஸ்லாமியர்கள் மீது அமெரிக்கா குண்டுவீச்சு நடத்துகிறது என்ற பிரசாரம் நடக்கக்கூடாது என்பதற்காக!
இதற்காக 4 நாடுகளை அமெரிக்கா தம்முடன் கூட்டு சேர்க்க முடிந்தது. அந்த 4 நாடுகளும், ஐக்கிய அரபு அமிரகம், ஜோர்தான், சவுதி அரேபியா, . அமெரிக்க விமானங்களுடன் இணைந்து இந்த 4 நாடுகளின் விமானங்களும் சிரியாவிலும், ஈராக்கிலும் குண்டுகளை வீசின. ஆனால், அமெரிக்க விமானங்கள் எத்தனை குண்டுவீச்சு தாக்குதல்களை நடத்தின, இவர்கள் எத்தனை தடவைகள் பறந்தார்கள் என்ற புள்ளிவிபரம் ஏதும் வெளியிடப்படவில்லை.
அதாவது, இந்த 4 நாடுகளின் விமானங்களும் ‘சிம்பாலிக்காக’ பறந்தன. நிஜ குண்டுவீச்சுகளை செய்தது அமெரிக்க விமானங்கள்தான். இப்படி சிம்பாலிக்காக பறந்த போதே, ஜோர்தானிய விமானம் வீழ்ந்தது. அதன் விமானியும் உயிருடன் சிக்கினார்.
அத்துடன் மிரண்டுபோன ஐக்கிய அரபு அமிரகம், நான் வரவில்லை இந்த விளையாட்டுக்கு என ஒதுங்கிக் கொண்டது. ஆனால், அதை வெளிப்படையாக அறிவித்தால், அது இரு நாடுகளுக்குமே இமேஜ் பாதிக்கும் விஷயமாகிவிடும். அமெரிக்காவை பொறுத்தவரை, அவர்களது கூட்டாளி நாடுகளில் ஒன்று கழன்று கொண்டது என்று சொன்னால் நன்றாகவா இருக்கும்? அதைவிடுங்கள். ஐக்கிய அரபு அமிரகம் கழன்று கொண்ட கதை பகிரங்கமானால், மற்ற 3 நாடுகளிலும் மக்களிடம் இருந்து எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்குமல்லவா? “எமது விமானங்களையும், விமானிகளையும் எதற்காக ரிஸ்க் எடுத்து அனுப்ப வேண்டும்?” இதனால், ஐக்கிய அரபு அமிரகம் ஒதுங்கிக் கொண்ட விஷயத்தை எல்லோருமாக அமுக்கி விட்டு, கம்மென்று இருந்து விட்டார்கள். ஆனால், இப்போது வேறு வழியில் வெளியாகிவிட்டது இந்தக் கதை.

No comments:

Post a Comment