Friday, February 27, 2015

அய்யோ..அல்கொய்தாவின் புகழ் போச்சே… பின்லேடன் கதறி கதறி எழுதிய கண்ணீர் கடிதங்கள்!

அல்கொய்தா அமைப்பின் வீழ்ச்சியை நினைத்து அந்த அமைப்பின் முன்னாள் தலைவரான ஒசாமா பின்லேடன் எழுதிய கண்ணீர் கடிதங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
சர்வதேச பயங்கரவாத அமைப்பான அல்கொய்தாவின் முன்னாள் தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்கா சுட்டுக் கொன்ற பிறகே அல்கொய்தா வீழ்ச்சியை சந்தித்ததாக கூறப்பட்டு வந்தது.
ஆனால் ஒசாமா எழுதிய கடிதங்களில், அல்கொய்தாவின் வீழ்ச்சி அவரது மரணத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடிதம் ஒன்றில் அவர் கூறியதாவது, அல்கொய்தா செயல்படாத அமைப்பாக ஆகி வருவதால், இந்த அமைப்பின் மீது முஸ்லிம் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையும் குறைந்துவிட்டது.
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்த விரும்புகிறேன். ஆனால் அமைப்பின் மீது முஸ்லிம்களுக்கு நம்பிக்கை இல்லாதது மற்றும் அமைப்புக்குள்ளேயே பிரச்சனை உள்ளதால் அது முடியவில்லை என கவலையுடன் கூறியுள்ளார்.
இதேபோல் மற்றொரு கடிதத்தில், அல்கொய்தா அமைப்பின் கவனம் சிதறுவதை நினைத்து ஒசாமா கோபம் அடைந்திருப்பது தெரியவந்துள்ளது
மேலும் சோமாலியாவைச் சேர்ந்த அல் ஷபாப் பற்றி கவலையில் ஆழ்ந்த ஒசாமா, ஷரியா சட்டத்தை அமல்படுத்துகிறேன் என்ற பெயரில் தினமும் மக்களின் கைகளை வெட்டுவது நம்பிக்கையை சிதைக்கும் என கடிதம் ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment